சரவாக் மாநிலச் சின்னம் Coat of arms of Sarawak | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | சரவாக் |
உள்வாங்கப்பட்டது | 1988 |
விருதுமுகம் | Sarawak State Flag |
ஆதரவு | ஒரு காண்டாமிருக இருவாச்சி, மாநிலச்சின்னத்தின் சுருளைப் பற்றிக் கொள்ளும் காட்சி |
குறிக்கோளுரை | ஒற்றுமை, முயற்சி, சேவை (Bersatu, Berusaha, Berbakti) ("Unity, Effort, Service") |
சரவாக் மாநிலச் சின்னம் (ஆங்கிலம்: Coat of arms of Sarawak; மலாய்: Jata Sarawak) என்பது சரவாக் மாநிலத்தின் சிறப்புரிமை பெற்ற சின்னம் ஆகும்.[1]
1973 ஆகஸ்டு 31-ஆம் தேதி சிறப்புரிமைச் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இந்தச் சின்னம் 1988 ஆகஸ்டு 31-ஆம் தேதியில் புதிய உருவாக்கம் பெற்றது..
காண்டாமிருக இருவாச்சியின் இறக்கைகள் 13 இறகுகளைக் கொண்டுள்ளன. அவை மலேசியாவில் உள்ள பதின் முன்று மாநிலங்களைக் குறிக்கின்றன.[1]
செம்பருத்தி மலர் மலேசியாவின் தேசிய மலரைக் குறிக்கின்றது. Bersatu, Berusaha, Berbakti எனும் மலாய்ச் சொற்கள் "ஒற்றுமை, முயற்சி, சேவை" என்று பொருள்படும்.[1][2]
1842-ஆம் ஆண்டில் ஒரு பிரித்தானிய அதிகாரியான ஜேம்சு புரூக் என்பவரால் சரவாக் மாநிலம் நிறுவப்பட்டது. புரூணை சுல்தானுக்கு ஜேம்சு புரூக் வழங்கிய இராணுவ உதவிக்கான வெகுமதியாக புரூணை சுல்தானால் சரவாக் மாநிலம் வழங்கப்பட்டது.[3]
அந்தக் காலக்கட்டத்தில் (1840-ஆம் ஆண்டுகளில்) சரவாக் கடல் பகுதிகளில் கடற்கொள்ளைகள் பரவலாக இருந்தன. அந்தக் கடல் கொள்ளைகளை அடக்குவதில் ஜேம்சு புரூக் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
1842-ஆம் ஆண்டில், புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன், சரவாக்கின் முழு இறையாண்மையையும் ஜேம்சு புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தார். அந்தக் காலக் கட்டத்தில்தான் சரவாக் மாநிலத்தின் முதலாவது அரசு சின்னம் உருவாக்கப்பட்டது.