சரஸ்வதி கோரா
சரஸ்வதி கோரா(28.09.1912-19.08.2006)ஒரு சமூக ஆர்வலர் ஆவார். இறை மறுப்புக் கொள்கை மையத்தின் தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டு தீண்டாமை மற்றும் சாதிய அமைப்பு முறைக்கு எதிராக குரல் எழுப்பினார்.
1930 ஆம் ஆண்டு சரஸ்வதி தனது கணவர் கோராவுடன் இணைந்து தேவதாசிகள் மற்றும் கைம்பெண்களுக்கு மறுமணம் செய்து வைத்தார். மேலும், சாதிய அமைப்பு தீண்டாமை குறித்து அறிந்து அவற்றை களைய முற்பட்டனர். இவற்றின் காரணமாக 1944 ஆம் ஆண்டு சேவகரம் என்ற இடத்தில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு இரண்டு வாரங்கள் தங்குமாறு சரஸ்வதியையும் அவரது கணவரையும் அழைத்தனர். [1] சரஸ்வதி தனது கணவருடன் இணைந்து இறை மறுப்பு கொள்கை மையத்தை 1940 ஆம் ஆண்டு தொடங்கினார். இறை மறுப்பு, பகுத்தறிவு மற்றும் ககாந்தியக் கொள்கைகளின் அடிப்படையில் மனித விழுமியங்களை மேம்படுத்துவதே இவர்களின் குறிக்கோளாக இருந்தது. [சான்று தேவை]
இந்திய விடுதலை இயக்கத்தின் அரசியல் ஆர்வலராக இருந்த போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றத்தினால் தனது இரண்டரை மாத மகனான நியான்தாவுடன் சிறை சென்றார். [சான்று தேவை]
சரஸ்வதி தன்னுடைய சுயசரிதையான மை லைஃப் வித் கோரா என்ற நூலை தெலுங்கு மொழியில் வெளியிட்டார். இவருக்கு உடலில் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பினால் 19.08.2006 ஆம் ஆண்டு விசயவாடாவில் இயற்கை எய்தினார். [2]
சரஸ்வதி கோரா,2000 ஆம் ஆண்டு கர்நாடக அரசு அறிவித்த பஸ்வ புரஸ்கார் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மனித நேயத்திற்காக ஜி. டி. பிரில்லா சர்வதேச விருது, ஜாம்னாலால் பஜாஜ் விருது ஆகியவற்றைப் பெற்றார். [3] ஜானகி தேவி பஜாஜ் விருது [4] மற்றும் பொட்டி ஸ்ரீராமலு தெலுங்கு பல்கலைக்கழக விருது ஆகிய விருதுகளை வழங்கப்பெற்றார். [5]
Jamnalal Bajaj Award winners