சரிக்கே (P208) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Sarikei (P208) Federal Constituency in Sarawak | |
சரிக்கே மக்களவைத் தொகுதி (P208 Sarikei) | |
மாவட்டம் | சரிக்கே மாவட்டம்; மெராடோங் மாவட்டம் |
வட்டாரம் | சரிக்கே பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 55,018 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | சரிக்கே மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சரிக்கே |
பரப்பளவு | 712 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | உவாங் தியோங் சி (Huang Tiong Sii) |
மக்கள் தொகை | 43,119 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சரிக்கே மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sarikei; ஆங்கிலம்: Sarikei Federal Constituency; சீனம்: 泗里街联邦选区) என்பது மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவில்; சரிக்கே மாவட்டம், மெராடோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P208) ஆகும்.[5]
சரிக்கே மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து சரிக்கே மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சரிக்கே பிரிவு (Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கே பிரிவின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது.
1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது.
சரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது.
சரிக்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சரிக்கே தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9] | |||
3-ஆவது மக்களவை | P132 | 1971-1973 | சென் கோமிங் (Chen Ko Ming) |
சரவாக் சீனர் சங்கம் |
1973-1974 | பாரிசான் நேசனல் (சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP) | |||
4-ஆவது மக்களவை | P142 | 1974-1978 | சியேங் தியோங் காய் (Chieng Tiong Kai) | |
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | லா இயேங் டிங் (Law Hieng Ding) | ||
7-ஆவது மக்களவை | P166 | 1986-1990 | ||
8-ஆவது மக்களவை | P168 | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | P180 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | P181 | 1999-2004 | ||
11-ஆவது மக்களவை | P207 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | P208 | 2008-2013 | திங் குவோங் கிங் (Ding Kuong Hiing) | |
13-ஆவது மக்களவை | 2013-2018 | வோங் லிங் பியூ (Wong Ling Biu) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018-2022 | பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | உவாங் தியோங் சி (Huang Tiong Sii) |
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
உவாங் தியோங் சி (Huang Tiong Sii) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 20,080 | 55.07 | 55.07 | |
ரோட்ரிக் வோங் சியூ லீட் (Roderick Wong Siew Lead) | ஜனநாயக செயல் கட்சி (DAP) | 16,383 | 44.93 | 8.64 ▼ | |
மொத்தம் | 36,463 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 36,463 | 98.48 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 562 | 1.52 | |||
மொத்த வாக்குகள் | 37,025 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 55,018 | 67.30 | 10.79 ▼ | ||
Majority | 3,697 | 10.14 | 1.71 | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |