சரிதா | |
---|---|
பிறப்பு | அபிலாஷா 7 சூன் 1960 குண்டகல் ஆந்திர பிரதேசம், இந்தியா |
பணி | நடிகை, பின்னணி குரல் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1978-2006 2012-நடப்பு |
வாழ்க்கைத் துணை | வேங்கட சுப்பையா (1975; மணமுறிவு.1976) முகேஷ் (திருமணம்.1988; மணமுறிவு.2011) |
பிள்ளைகள் | ஸ்ரவன் தேஜாஸ் |
சரிதா (Saritha) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். 141 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[1][2][3]
சரிதா கே. பாலச்சந்தரால் 1978 இல் மரோ சரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 இல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பின்னர் கெ.பாலச்சந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப் படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத் தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது
சரிதா பாலச்சந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலச்சந்தர் இவரை நடிக்கச் செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பாலச்சந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப் பின்னர் 2005 இல் தமிழில் ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் மனநிலை பிறழ்ந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
சரிதா சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை 1979-80, 1982-83, 1988 ஆகிய ஆண்டுகளுக்காகப் பெற்றார்
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)