சரூர்நகர் ஏரி | |
---|---|
![]() | |
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா |
ஆள்கூறுகள் | 17°21′21″N 78°31′38″E / 17.35584°N 78.52714°E |
வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 99 ஏக்கர்கள் (40 ha)[1] |
அதிகபட்ச ஆழம் | 6.1 மீட்டர்கள் (20 அடி) |
குடியேற்றங்கள் | ஐதராபாத்து |
சரூர்நகர் ஏரி (Saroornagar Lake) இது, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஏரி. 1626 ஆம் ஆண்டில் அதன் உருவாக்கத்திலிருந்தே, 1956 ஆம் ஆண்டில் ஐதராபாத் விரிவடைந்தபோது இந்த ஏரியானது மிகவும் தூய்மையாக இருந்தது.[2] 99 ஏக்கர் (40 ஹெக்டேர்) பரப்பளவில் 2003-04 ஆம் ஆண்டில் ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் 200 மில்லியன் (அமெரிக்க $ 3.1 மில்லியன்) செலவில் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.[3] ஏரியின் மறுசீரமைப்பிற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்த பறவைகள் பெரிய எண்ணிக்கையில் ஏரிக்குத் திரும்பின.[1] மறுசீரமைப்புக்குப் பிறகு, ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க, குடிமைப் பிரிவுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.[4] மேலும், ஏரிக்கரை அருகே அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.[5] இருப்பினும், 2009 ஆம் ஆண்டளவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வடிகட்டுதல் அலகு முறையாக செயல்படுவதை நிறுத்தியது. இதனால், வீட்டுக் கழிவுகளால் ஏரி மாசடைந்து வருகிறது.[6]