சர் ஆன்சு கிரெப்சு பதக்கம் (Sir Hans Krebs Medal) என்பது ஆண்டுதோறும் ஐரோப்பியஉயிர்வேதியியல் சங்கங்களின் கூட்டமைப்பால் (FEBS) உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் அல்லது தொடர்புடைய அறிவியலில் சிறந்த சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது.
இது லார்ட் ரேங்க் ஆராய்ச்சி மைய நிறுவனத்தால் வழங்கப்பட்டது. செருமனியில் பிறந்த இங்கிலாந்து உயிர்வேதியியலாளர் சர் ஆன்சு அடால்ப் கிரெப்சின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது யூரியா சுழற்சி மற்றும் சிட்ரிக் அமிலச் சுழற்சிகளை அடையாளம் காண்பதில் நன்கு அறியப்பட்டதாகும். விருது பெறுபவர் ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெறுகிறார். பதக்கம் பெறுபவர் நிகழ்வு ஒன்றில் சொற்பொழிவு ஒன்றை வழங்குவார்.[1]