Sarnaism flag.svg கொடி | |
File:Sarna dhorom 2014-05-30 19-54.jpg சின்னம் | |
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை | |
---|---|
ஏறத்தாழ 78,41,870 - 93,41,870 | |
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள் | |
இந்தியா | |
ஜார்கண்ட் | 4,223,500 |
மேற்கு வங்காளம் | 2,512,331 |
பிகார் | 1,349,460 |
சத்தீஸ்கர் | 768,910 |
ஒடிசா | 478,317 |
வங்காளதேசம் | 500,000 |
சர்னா சமயம் (Sarna) கிழக்கு இந்தியாவின் ஜார்கண்ட், சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பரவியுள்ள சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் வாழ்கின்றனர்.[1] இது பழங்குடி முண்டா மக்கள், சந்தாலிகள், ஜுவாங் மக்கள், பூமிஜ் மக்கள், காரியா மக்கள், பைகா மகக்ள் ஹோ மக்கள் மற்றும் குரூக் மக்கள் பயிலும் சமயம் சர்னா சமயம் ஆகும். இது இயற்கையான காடு, மரங்களை நேசிக்கும் சமயம் ஆகும்.
இச்சமயத்தினர் ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் துணை மொழியான முண்டா மொழியின் உட்பிரிவுகளான குறுக்ஸ் மொழி, காரியா மொழி, சந்தாளி மொழி, ஜுவாங் மொழி மற்றும் ஹோ மொழிகளை பேசுகின்றனர். இச்சமயத்தினர் காடுகளை கிராம தேவதைகளாக வழிபடுகின்றனர்.[2][3] ஆண்டிற்கு இருமுறை கிராம தேவதைகளுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர்.
தற்போது இச்சமயத்தினரில் பாதியளவு மக்கள் கிறித்துவ சமயத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்சமயத்தைப் பின்பற்றுபவர்கள், கிழக்கு இந்தியாவில் 78,41,870 முதல் 93,41,870 வரை உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் 4,223,500, மேற்கு வங்காளம் 2,512,331, பிகார் 1,349,460, சத்தீஸ்கர் 768,910 ஒடிசா 478,317 மற்றும் வங்காளதேசத்தில் 500,000 ஆக சர்னா சமயத்தை பயில்கின்றனர்.
கிராமங்களில் உள்ள தோப்புகள், காடுகளே சர்னா சமயத்தினரின் தெய்வங்கள் ஆகும். இச்சமயத்தினர் முக்கியமாக சால மரங்களை புனிதமாக கருதுகின்றனர். கிராமத்தின் பழங்குடி சர்னா சமயத்தினர் அனைவரும் நாயக்கே எனும் பூசாரி தலைமையில் ஒன்று கூடி சாலமரம், வேப்ப மரம், ஆல மரத்தடியில் கிராம தேவதைகளை வழிபாடு செய்து, படையல்கள் இடுவர். நீத்தார் வழிபாடும் சர்னா சமயத்தினரின் முக்கிய வழிபாடு ஆகும்.[4]
வரிசை எண் | மாநிலம் | மக்கள் தொகை |
---|---|---|
1. | ஜார்கண்ட் | 4,223,500 |
2. | மேற்கு வங்காளம் | 2,512,331 |
3. | பிகார் | 1,349,460 |
4. | சத்தீஸ்கர் | 768,910 |
5. | ஒடிசா | 478,317 |
மொத்தம் | ஏறத்தாழ் 7,800,000 முதல் 9,300,000 வரை | |
Source:2011 Census of India[5] |
பெரும்பாலான பழங்குடி அமைப்புகளும், கிறித்துவ அமைப்புகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்களை சர்னா சமயத்தினர் என்ற வகைப்பாட்டில் வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.[6][7] சர்னா சமயத்தினர் ஏற்கனவே இந்து தர்மத்தில் சேர்க்கப்பட்டுள்ளாதால், இக்கோரிக்கையை இந்திய அரசு ஏற்கவில்லை.
வாக்கு வங்கி அரசியலுக்காக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 2020-இல் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக பதவி ஏற்றபோது, சர்னா சமயம் என தனி சமயம் என்ற சட்ட முன்மொழிவிற்கு ஆதரவாக தீர்மானம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.[8][9]