சர்பானி பாசு Sarbani Basu | |
---|---|
பணியிடங்கள் | யேல் பல்கலைக்கழகம் ஆரசு பல்கலைக்கழகம் இலண்டன் அரசி மேரி பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சென்னை பல்கலைக்கழகம் மும்பை பல்கலைக்கழகம் |
சர்பானி பாசு (Sarbani Basu) ஓர் இந்திய வானியற்பியலாளரும் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். இவர் பல்கலைக்கழகங்களின் வானியல் ஆராய்ச்சிக் கழகக் குழும இயக்குநர்களில் ஒருவராவார். இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினர் ஆவார்.
பாசு 1986 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் தன் பட்டமேற் படிப்பை பூனே சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகத்திலும் மும்பை பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். இவர் முனைவர் பட்டத்தை 1993 இல் பெற்றுள்ளார்.[1]
இவர் ஆர்கசு பல்கலைக்கழகத்தில் சேரும் முன் இலண்டன் அரசி மேரி பல்கலைக்கழகத்தில் 1993 இல் முதுமுனைவர் ஆய்வாளராகச் சேர்ந்துள்ளார்.[1] இவர் 1996 இல் இந்திய வானியல் கழகத்தின் எம். கே. வைணு பாப்பு பொற்பதக்கத்தைப் பெற்றார்.[2] இவர் 1997 இல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு நிறுவன உறுப்பினராகச் சேர்ந்தார்.[1][3][4] இவர் 2000 இல் யேல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து 2005 இல் பேராசிரியர் ஆனார்.[1] இவர் 2002 இல் கெல்மன் குடும்ப்ப் புல உறுப்பினர் ஆய்வுநல்கையை வென்றார். இவர் சூரியக் கட்டமைப்பிலும் இயங்கியலிலும் ஆர்வம் கொண்டவர். இதற்கு இவர் உடுக்கண அலைவுகளைப் பயன்படுத்துகிறார்.[5][6] சூரிய நடுக்கத் தலைக்கீழாக்கங்களைக் கண்காணித்து சூரியனுக்குள் நிகழும் செயல்முறைகளைத் தீர்மானிக்கிறார்.[7][8] இவர் ஒரு நூலில் சூரிய நடுக்கவியல் எனும் இயலை எழுதியுள்ளர்.[9] பாசு 200 அளவுக்கும் மேற்பட்ட சம வல்லுனர் மீள்பார்வையிட்ட ஆய்வுக் கட்டுரைகளை அறிவியல் ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். இவரது உயர் சான்று சுட்டெண் 82 ஆகும்.[10]
பாசு 2015 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வனார்.[11] இவர் 2017 இல் வில்லியம் சாளினுடன் இணைந்து " வான் நடுக்கத் தரவு பகுப்பய்வு அடிப்படைகளும் நுட்பங்களும்" எனும் கட்டுரையை வெளியிட்டார்.[12] இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் ஜார்ஜ் எல்லேரி ஏல் பரிசைச் சூரிய அகக் கட்டமைப்பு ஆய்வுப் பங்களிப்புகளுக்காக 2018 இல் பெற்றார்.[13][14][15] இவர் வர்ஜீனியாவில் நடந்த மூன்றாண்டுக்கு ஒருமுறை புவி-சூரியன் மாநாட்டின் விருதைப் பெற்றுள்ளார்.[16] இவர் பள்ளிகளுக்குச் சென்று தன் ஆராய்ச்சியைப் பற்றி இளைஞரோடு விவாதிக்கிறார்.[17][18]
{{cite book}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)