சர்யாபத்

சர்யாபத் (Charyapada) பௌத்தத்தின் வச்சிரயான மரபுவழி ஆன்மிகப் பாடல்களின் தொகுப்பாகும். வங்காள, அசாமிய, மைதிலி, ஒடியா மொழிகளின் முன்னோடியாக 8ஆவது, 12ஆவது நூற்றாண்டுகளுக்கிடையே நிலவிய அபகத்த மொழியில் எழுதப்பட்டவையாகும். இம்மொழிகளில் எழுதப்பட்ட மிகத் தொன்மையான கவிதைகள் இவையேயாகும். சர்யாபத்தின் ஓலைச்சுவடி மூலம் ஒன்றை 20ஆம் நூற்றாண்டில் நேபாள அரச மன்ற நூலகத்திலிருந்து அரபிரசாத் சாத்திரி கண்டெடுத்தார்.[1] திபெத்திய பௌத்த சமயவிடங்களிலும் சர்யாபத் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.[2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Guhathakurta, Meghna; van Schendel, Willem (30 April 2013). The Bangladesh Reader: History, Culture, Politics. Duke University Press. p. 40. ISBN 0-8223-5318-0.
  2. Kværne, Per (2010). An Anthology of Buddhist Tantric Songs: A Study of the Caryāgīti. Orchid Press. ISBN 978-974-8299-34-1.