சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக் (International Premier Tennis League) என்பது உலக அளவில் பிரபலமான டென்னிசு வீரர்களை கொண்டு 2014ம் உருவாக்கப்பட்ட ஓர் தனியார் அமைப்பாகும்.இதன் இயக்குநராக இந்திய டென்னிசு வீரரான மகேஸ் பூபதி உள்ளார். டெல்லி, துபாய், சிங்கப்பூர் மற்றும் மணிலா ஆகிய ஆசிய நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு போட்டிகள் டிசம்பர் 2014ல் நடைபெற்றுள்ளது. டெல்லி அணிக்காக சுவிஸ் வீரரும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் களமிறங்கியுள்ளார்.[1][2][3]