இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
சர்வதேச தொழில்துறை வங்கி (International Industrial Bank) (உருசிய மொழி: Международный Промышленный Банк, சுருக்கப்பெயர்,MPB, ВИДЕО) என்பது உருசியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். 1992 இல் செர்ஜி புகாச்சியோவ் மற்றும் செர்ஜி வெரெமென்கோ ஆகியாரால் இவ்வங்கி நிறுவப்பட்டது .
ஜூலை 6, 2010 அன்று, இவ்வங்கி முதிர்ச்சியடைந்த யூரோ பாண்டு பத்திரங்களால் €200 மில்லியன் தொகையை பத்திரதாரர்களுக்கு செலுத்தத் தவறியது. இதனால் ரஷ்யாவின் மத்திய வங்கி வைப்புத் தொகைதாரர்களுடன் மோசமடைந்து வரும் பணப்புழக்க நிலையை நிலைநிறுத்துவதற்கு விவாதித்தது. இருப்பினும், நவம்பர் 30, 2010 அன்று, மாஸ்கோ நீதிமன்றம் இந்த வங்கியின் திவால் மற்றும் தீர்வின்மையினை அறிவித்தது.
2006 ஆம் ஆண்டில், நியூசிலாந்தை தளமாகக் கொண்ட ஓ.பி.கே அறக்கட்டளை நிறுவனம் அதன் 100 சதவீத பங்கைக் கொண்டிருப்பதை வங்கி கண்டுபிடித்தது. ஓ.பி.கே அறக்கட்டளை நிறுவனம் செர்ஜி புகாச்சியோவ் என்பவாின் கட்டுப்பாட்டில் உள்ளது. [1]
டிசம்பர் 2010 இல், ஒரு உருசிய நீதிமன்றம் சர்வதேச தொழில்துறை வங்கியை திவாலாகிவிட்டதாக அறிவித்து, அதற்கெதிராக கலைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.