சர்வம் தாளமயம் | |
---|---|
இயக்கம் | ராஜீவ் மேனன் |
கதை | ராஜீவ் மேனன் |
இசை | ஏ.ஆர்.ரஹ்மான் |
நடிப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் அபர்னா பாலமுரளி நெடுமுடி வேணு வினீத் |
ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
படத்தொகுப்பு | அந்தோனி |
வெளியீடு | பிப்ரவரி 1, 2019 |
ஓட்டம் | 2 மணிநேரம் 11நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சர்வம் தாளமயம் (sarvam thaalamayam) இந்தியத் திரைப்படமாகும். இதனை ராஜீவ் மேனன் இயக்கினார். இப்படம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று வெளியானது. இப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை அபர்னா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்செயன் மற்றும் குமரவேல் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்[1], ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் படத்தொகுப்பாளர் அந்தோனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய பங்களித்துள்ளனர்.
சிறப்புத் தோற்றமாக
2000ஆம் ஆண்டில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம் மூன்றாவது திரைப்படமாகும். இப்படம் மார்ச் 2016ஆம் ஆண்டில் தயாரிப்பு தொடங்கியது. நடிகை சாய் பல்லவி முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இப்படக்குழு தேர்வு செய்தனர்[2]. சில காரணங்களினால் இப்படம் தற்காலிகமாக தயாரிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர், நடிகை சாய் பல்லவிக்குப் பதிலாக மலையாள திரைப்பட நடிகை அபர்னா பாலமுரளியை தேர்வு செய்தனர். ரவி யாதவ் ஒளிப்பதிவாளராகவும் மற்றும் அந்தோனி படத்தொகுப்பாளராகவும் முடிவு செய்தனர்.
இப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. இயக்குனர் ராஜீவ் மேனன் ஒரு பாடலை இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ் மற்றும் நா.முத்துகுமார் ஆகியோர் இப்படத்திற்கு பாடல்களை இயற்றியுள்ளனர்[3]. நவம்பர் 18ஆம் தேதியன்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் திரைப்பட பாடல்களை வெளியிடப்பட்டது. இப்பாடல்கள் தெலுங்கில் பாடலாசிரியர்கள் ராகெந்து மெளலி மற்றும் தியாகராஜா ஆகியோர் இயற்றியுள்ளனர்.