பேராசிரியர் சல்மா ஷாகீன் | |
---|---|
இயற்பெயர் | سلمہ شاہین |
பிறப்பு | 16 ஏப்ரல் 1954[1] பாக்தாதா, மர்தான், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
தொழில் |
|
மொழி | பஷ்தூ, உருது |
கல்வி | முனைவர் |
கல்வி நிலையம் | மர்தான் மகளிர் கல்லூரி |
வகை |
|
கருப்பொருள் |
|
செயற்பட்ட ஆண்டுகள் | 19xx– தற்போது வரை |
குறிப்பிடத்தக்க விருதுகள் | தம்கா-இ-இம்தியாஸ் |
சல்மா ஷாகீன் (Salma Shaheen) (பிறப்பு: 1954 ஏப்ரல் 16) பாக்கித்தானைச் சேர்ந்த கவிஞரும், புனைகதை எழுத்தாளரும், ஆராய்ச்சியாளரும், முதல் பஷ்தூ மொழி -பெண் புதின ஆசிரியருமாவார். இவர் பெசாவர் பல்கலைக்கழகத்தின் பஷ்தூ கழகத்தின் மொழி ஒழுங்குமுறை நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராகவும் பணியாற்றினார். [2] [3] இவர் தனது இலக்கியப் பணியைத் தொடங்கியதிலிருந்து முதன்மையாக உருது மற்றும் பஷ்தூ மொழிகளில் கவிதைகளை எழுதினார். கைபர் பக்துன்க்வாவின் முக்கிய பெண் எழுத்தாளர்களில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப்படுகிறார். இவர் பஷ்தூ மொழி, கலாச்சாரம் மற்றும் அதன் இலக்கியங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக நம்பப்படுகிறது. [4] [5]
சல்மா 1954 ஏப்ரல் 16 அன்று கைபர் பக்துன்க்வாவின் மர்தானில் உள்ள பாக்தாதா நகரில் பிறந்தார். 1971ஆம் ஆண்டில் ஒரு அரசுப் பள்ளியிலிருந்து தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். பின்னர் 2002ஆம் ஆண்டில் மர்தான் மகளிர் பல்கலைக்கழகத்தில் (முன்னர் மர்தான் பெண்கள் மகளிர் கல்லூரி) பயின்றார். மேலும், நவீன பஷ்தூ கவிதைகளில் பட்டப்படிப்பு, முனைவர் பட்டம் உள்ளிட்ட மேலதிக கல்வியை முடித்தார்.
இவர், தனது பிள்ளை பருவத்திலேயே எழுத்துக்களில் ஈடுபட்டார். தனது எட்டாம் வகுப்பில் படிக்கும் போது முதலில் எழுதத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. இவரது தந்தை இவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தா. மேலும், பஷ்தூ பெண்களுக்கு தார்மீக அதிகாரம் பெற ஊக்கப்படுத்தினார். பஷ்தூ கழகத்தின் இயக்குநராக, இவர் 2011இல் மொழி ஒழுங்குமுறை நிறுவனத்தை மீட்டெடுத்தார். இது முன்னர் பஷ்தூ மொழி மற்றும் இலக்கியத்திற்கான மையம் என அழைக்கப்படாத ஒரு நிறுவனத்தில் இணைக்கப்பட்டிருந்தது. மேலும், ஹுஜ்ரா, இசை, நடனம் மற்றும் ஜிர்கா பற்றிய 120 பக்துன்வாலி புத்தகங்களை வெளிக்கொண்டு வந்த பெருமையும் இவருக்கு உண்டு.
ஒரு கவிஞராக, இவர் உருது மற்றும் பஷ்தூ மொழிகளில் பதினான்கு முதல் பதினெட்டு புத்தகங்களை எழுதினார். மேலும் ஒரு ஆராய்ச்சியாளராக, இவர் நாட்டார் பாடல் அல்லது "பஷ்தூ தபா" என்ற தலைப்பில் நாட்டுப்புற இசை குறித்த ஆராய்ச்சி புத்தகத்தை எழுதினார், "கன்ரி ஆவோ ஆக்ஸி" சிறுகதையை எழுதினார். இவரது கவிதை புத்தகங்களில் "ஜா ஹம் ஹாக்ஸே வாரா வே" மற்றும் "நவே சஹார்" ஆகியவை அடங்கும். இது முதலில் 1982இல் வெளியிடப்பட்டது. [6] ஒரு ஆராய்ச்சியாளராக, சமூக, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மொழி தடைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் 42 வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். இவரது கவிதை பஷ்தூ கலாச்சாரம், இலக்கியம் மற்றும் மரபுகளை மையமாகக் கொண்டுள்ளது. "கா ராணா ஷாவா" மற்றும் "கனி ஆ ஆஸ்கி" என்ற இரண்டு புதினங்களையும் எழுதியுள்ளார். "அபாசின் டா தாரிக்", "முஷாரதி ஆ சகாபதி ஆசர்" மற்றும் "அவாமி சண்டரே" உள்ளிட்ட முக்கிய புத்தகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட கவிதைகளையும் இவர் எழுதினார். ஒரு எழுத்தாளராக ஆய்வரங்குகள், மாநாடுகள் போன்ற இலக்கிய நிகழ்வுகளில் பல நாடுகளில் பாக்கித்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தினா. மேலும் சீனாவுக்கான ஒரு கலாச்சாரக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சீனாவுக்குச் சென்ற வந்த பின், "தில் அவுர் அங்கீன் சீன் மெயின்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார்.
பஷ்தூ இலக்கியம், சமூக, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புக்காக ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். இவரது விருதுகளில் அபாசின் கலை அமைப்பு விருது, பாக்கித்தான் கலாச்சார சங்கம் விருது, 2009 இல் பாக்கித்தான் அரசாங்கத்தால்பாக்கித்தான் கடிதங்களில் அகாதமிக்கான விருது அகாடமி , தம்கா-இ-இம்தியாஸ் ஆகியவை [7]