![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சுராப் தைவாரி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | அக்டோபர் 20 2010 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | டிசம்பர் 10 2010 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 16 2011 |
சவுரவ் திவாரி (Saurabh Tiwary, பிறப்பு: டிசம்பர் 30 1989)[1] ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.[1] இவர் 2010 இல் இந்தியா அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.இடதுகை மட்டையாளரான இவர் 19 வயதிற்குட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடியுள்ளார்.[1] மேலும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் ,டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.[2] 2008 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாகத் திகழந்தார்.[1][3]
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஆரம்பகால பருவத்தில் 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இவருக்கும் ஒருவர். 2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. 2010 ஆம் ஆண்டிலும் இவர் இந்த அணிக்காக விளையாடினார்.[2] இவர் இடதுகையால் மட்டையாடும் திறன் மகேந்திரசிங் தோனியுடன் ஒப்ப்பிடப்பட்டது.
2010 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 419 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவரின் சராசரி 29.92 ஆகும். இவரின் ஸ்டிரைக் ரேட் 135.59 ஆகும். இந்தப் பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்வதற்கு மிகமுக்கியமான காரணமாகத் திகழந்தார். 2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் இவரை 70 லட்சம் இந்திய ரூபாயில் ஏலத்தில் எடுத்தது. ஆனால் இவருகு காயம் ஏற்பட்டதனால் இவரால் விளையாட இயலாமல் போனது. பின் இவருக்குப் பதிலாக தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இம்ரான் தாஹிர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. 2016 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சூதாட்டப் புகாரினால் இர் அணிகள் விளையட இயலாமல் போனது. எனவே இரு அணிகள் புதியதாக களம் இறங்கின . இவரும் அல்பி மோர்க்கலும் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணிக்காக விளையாடினார்கள். இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தத் தொடரின் முதல் அரை நூறினைப் பதிவு செய்தார்.[2] பின் தனது முந்தைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அரை நூறினைப் பதிவு செய்தார்.
பெப்ரவரி 2017 ஆம் ஆண்டில் ,இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடந்தது. மீண்டும்மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[4] மே 13, 2017 இல் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் அரை நூறு ஓட்டங்கள் எடுத்தார்.[2] சனவரி 2018 ஆம் ஆண்டில், 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.