தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சைய்ட் சஹீர் அப்பாஸ் கிர்மானி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 6 2005 |
சையத் சஹீர் அப்பாஸ் கிர்மானி (உருது: سید ظہیر عباس کرمانی, Syed Zaheer Abbas Kirmani, சூலை 24 1947, முன்னாள் முன்னணி பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 78 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 62 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1985 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் பஞ்சாப், சியல்கொட்டைச் சேர்ந்தவர். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1981/1982, 1984/1985 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார். விளையாடும் போது கண்ணாடி அணிந்து கொள்ளும் சில தொழில்முறை துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.. 1982/1983 இல், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று நூறு ஓட்டங்கள் அடித்த முதல் மட்டையாளர் ஆனார். [1] சில நேரங்களில் 'ஆசிய பிராட்மேன்' என்று அழைக்கப்படும் சாகீர் அப்பாஸ் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். [2] [3] [4]
இவர் 1969 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது இரண்டாவது போட்டியில் இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 274 ஓட்டங்கள் எடுத்தார். இது பாக்கித்தான் மட்டையாளர்களின் வரிசையில் ஆறாவது அதிகபட்ச தனிநபர் ஓட்டமாகும். இவர் நான்கு முறை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இரு நூறு ஓட்டங்களை எடுத்துள்ளார். இதற்கு முன்பாக யூனிஸ் கான் மற்றும் ஜாவேத் மியாண்டாத் மட்டுமே இந்தச் சாதனை படைத்தனர். [5] இறுதியாக 1983 இல் இந்தியாவுக்கு எதிராக 215 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் தொடர்ச்சியான மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனை படைத்தார். மேலும் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100, நூறு ஓட்டங்களை எடுத்துள்ளார். இவரும் ஜெஃப்ரி பாய்காட் மட்டுமே இந்தச் சாதனையினைப் படைத்துள்ளனர்.[6]
"ரன் மெஷின்" என்று அழைக்கப்படும் அப்பாஸ், முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் பெரும் வெற்றியைப் பெற்றார். மேலும் நூறு முதல் தர நூறுகளை அடித்த முதல் ஆசிய மட்டையாளர் எனும் சாதனை படைத்தவர் ஆவார். [7] இவர் க்ளூசெஸ்டர்ஷையர் அணிக்காக நீண்ட காலம் விளையாடினார். 1972 இல் கவுண்டியில் சேர்ந்த இவர் பதின்மூன்று ஆண்டுகள் அங்கேயே இருந்தார். அந்த நேரத்தில் இவர் தனது பதிமூன்று பருவங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்தார். அந்த சங்கத்திற்காக (1976 மற்றும் 1981) இரண்டு வேளைகளில் ஒரே பருவத்தில் இரண்டாயிரத்துக்கு மேல் ஓட்டங்களை எடுத்தார். க்ளூசெஸ்டர்ஷையரில் பதின்மூன்று ஆண்டுகளில், இவர் 206 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 16,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இவர் 49.79 எனும் சராசரியில் 49 நூறுகளையும் 76 அரை நூறுகளையும் எடுத்தார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் நான்கு முறை நூறுகள் மற்றும் இரு நூறுகள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஒரே வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.[8]
ஜாகீர் அப்பாஸ் 1988 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிறந்த ரீட்டா லுத்ராவை (இப்போது சமினா அப்பாஸ் என்று அழைக்கப்படுகிறார்) மணந்தார். [9] சமினாவின் தந்தை கே.சி.லூத்ரா ஜாகீரின் தந்தை ஷபீர் அப்பாஸின் நண்பராக இருந்தார். [10] இவர்களது மகள் சோனல் அப்பாஸ் டெல்லியில் ஒரு தொழிலதிபரை மணந்தார்.