சாகர் படைவீரர் குடியிருப்பு Sagar Cantonment | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°51′17″N 78°44′23″E / 23.85472°N 78.73972°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | சாகர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 35,872 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் |
சாகர் படைவீரர் குடியிருப்பு (Sagar Cantonment) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் உள்ளது.
2001 [1] ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சாகர் படைவீரர் குடியிருப்பு 35,872 என்ற மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் ஆண்கள் 52% ஆகவும், பெண்கள் 48% ஆகவும் இருந்தனர். சாகர் படைவீரர் குடியிருப்பின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். அப்போது இது தேசிய கல்வியறிவு சராசரியான 59.5% என்பதை விட அதிகமாக இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு 77% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 66% ஆகவும் இருந்தது. சாகர் படைவீரர் குடியிருப்பு, மக்கள் தொகையில் 15% பேர் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளாவர்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இங்கு மக்கள்தொகை 40,513 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் 22,569 பேர் ஆண்களாகவும் 17,944 பேர் பெண்களாகவும் இருந்தனர். சாகர் படைவீரர் குடியிருப்பின் சராசரி கல்வியறிவு விகிதம் 87.69% ஆகும். அப்போது இது மாநில கல்வியறிவு சராசரியான 69.32% என்பதை விட அதிகமாக இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு 92.54% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 81.44% ஆகவும் இருந்தது.