Sagil | |
---|---|
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°17′00″N 102°36′00″E / 2.28333°N 102.60000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
நகரத் தோற்றம் | 1900-களில் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
அஞ்சல் குறியீடு | 84020 |
சாகில், (மலாய்: Sagil; ஆங்கிலம்: Sagil; சீனம்: 萨吉尔) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், தங்காக் மாவட்டத்தில்; தங்காக் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள நகரம். இந்த நகரம் லேடாங் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ளது. மலாக்கா ஜொகூரின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
மலேசியாவில் புகழ்பெற்ற லேடாங் மலையில் (Gunung Ledang) ஏறுவதற்கு இங்கு இருந்தும் செல்வார்கள். வழக்கமாக மலாக்கா, புக்கிட் அசகான் நகருக்குச் சென்று அங்கு இருந்தும் லேடாங் மலையில் ஏறுவார்கள். ஆயர் பனாஸ் நீர்வீழ்ச்சியும் (Air Panas Waterfall) இங்குதான் உள்ளது.[1]
இங்கு பல்வேறு கிராமங்கள் உள்ளன. மலாய் மக்களின் பூர்வீகக் கிராமங்கள்.
இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் சாகில் தமிழ்ப்பள்ளி.[2] 44 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.