ஜாஹிர் கான் (Zahir Khan பஷ்தூ: ظاهر خان ; பிறப்பு 20 டிசம்பர் 1998) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . இவர் செப்டம்பர் 2019 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்ட ம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார் . 21 நவம்பர் 2015 அன்று 2015–17 ஐ.சி.சி இன்டர் கான்டினென்டல் கோப்பையில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[2] இவர் 2016 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடினார் .[3] அவர் ஆப்கனித்தான் தேசிய அணி தவிர 19 வயதிற்குட்பட்ட ஆப்கானித்தான் அணி, இஸ்லாமாபாத் யுனைட்டட், ஜமைக்கா தல்வாச், காபூல் ஈகிள்ஸ், லங்காசயர், மிஸ் ஐயினாக் பகுதி துடுப்பாட்ட அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகிய அணிகளுக்காகௌம் விளையாடி வருகிறார்.
ஆகஸ்ட் 10, 2017 அன்று நடைபெற்ற காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் பேண்ட்-இ-அமீர் பிராந்தியத்திற்காக இவர் பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[4] இந்தத் தொடரில் மொத்தமாக 12 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[5] இவர் செப்டம்பர் 12, 2017 அன்று 2017 ஷ்பகீசா துடுப்பாட்ட லீக்கில் மிஸ் ஐனக் நைட்ஸ் அணிக்காக இருபதுக20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகம்து ஷா அப்தாலி நான்கு நாள் போட்டித் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 30 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[7]
செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் நங்கர்ஹார் அணியில் இடம் பெற்றார்.[8] 2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவு அணியில் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல் குல்னா டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றார்.[9]
டிசம்பர் 2017 இல், இவர் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[10] ஜனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தத்தில் எடுத்தது.[11][12] டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றார்.[13]
2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.[14][15]
பிப்ரவரி 2019 இல், ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அதில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) மற்றும் இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் இடம் பெற்றார் .[16][17] இவர் மார்ச் 10, 2019 அன்று அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[18] ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதால் இவர் அயர்லாந்திற்கு எதிரான ஆப்கானிஸ்தானின் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் இவர் விளையாடவில்லை.[19]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)