சாகோரி மாவட்டம் ( ஆங்கிலம்: Jaghori District ) என்பது ஆப்கானித்தானில் உள்ள கசுனி மாகாணத்தின் முக்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இது கசராசத் பிராந்தியத்தின் தெற்கு விளிம்புகளில் உள்ள மலைப்பகுதிகளின் மேல் அமைந்துள்ளது.. அர்கந்தாப் பள்ளத்தாக்கில் இது 1,855 கிமீ 2 பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது.[1] மக்கள் தொகை சுமார் 300,000 என்ற அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது.[2] மாவட்ட தலைநகரான சங்கே-இ-மாசாவில், பல முக்கிய வணிக பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. மாவட்டம் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ளது, மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முக்கிய வருமான ஆதாரங்களாக உள்ளனர். கோசோர், காத்கோல் மற்றும் அங்கூரி ஆகிய இடங்களில் பிற முக்கிய சந்தைகளும் உள்ளன.
1830 களில் தோஸ்த் முகம்மதுகானின் காலத்தில், இப்பகுதி கசராசத்தின் தன்னாட்சி பகுதியாக செயல்பட்டது. 1949 இல் மாலஸ்தான் மாவட்டம் அதிலிருந்து பிரிக்கப்பட்டது. சாகோரி செபாவில் 600,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், அங்கு முக்கியமாக கசாரா இன மக்கள் வசிக்கின்றனர். 2008 இல் மலிஸ்தானில் 60 சமூக மேம்பாட்டுக் குழுக்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. [ மேற்கோள் தேவை ]
சாகோரியின் காலநிலை பொதுவாக வறண்ட கண்ட காலநிலையைக் கொண்டுள்ளது., குளிர் மற்றும் பனி குளிர்காலம், மற்றும் வெப்பமான கோடை 25 °C முதல் 38. C வரை வெப்பநிலை அதிகரிக்கும்.
சாகோரி மாவட்டம் கடந்த ஆண்டுகளாக காபூல் பல்கலைக்கழகம் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பிற பல்கலைக்கழகங்களில் இடம் பெற அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உருவாக்கி வருகிறது. பல ஆண்டுகளாக பிரிவு, பழங்குடி, இன மற்றும் மத மோதல்களின் போது மக்கள் கடந்து வந்தவற்றிற்கு எதிரான எதிர்வினையாக கற்றல் மற்றும் கல்விக்கான புதிய போக்கு அதிகரித்து வருகிறது. தற்போது 92 உயர்நிலைப் பள்ளிகளும், நூற்றுக்கணக்கான சிறிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் மாவட்டத்தில் உள்ளன, ஆனால் சாலைகள், மின்சாரம், நீர் அல்லது எரிவாயு போன்ற பிற உள்கட்டமைப்பின் வளர்ச்சி குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லை. இரவில் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தாங்களாகவே மின்சாரம் தயாரிக்கிறார்கள் (பொதுவாக குளிர்காலத்தில் மாலை 6 முதல் 8 மணி வரை அல்லது கோடையில் இரவு 7 முதல் 9 மணி வரை). பலர் சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறார்கள், நதிக்கு அருகில் இருப்பவர்கள் மின்சாரம் தயாரிக்க விசையாழிகளைப் பயன்படுத்துகிறார்கள். 2008 ஆம் ஆண்டில் போர் நடக்கும் காலங்களில் பாதுகாப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.
2003 ல் ஆப்கானித்தானுக்கான ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மற்றும் 2007 ல் கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் தகவல்களின்படி, இப்பகுதியில் உள்ள முக்கிய பயிர்கள் கோதுமை, சோளம், மக்காச்சோளம், பட்டாணி, கால்நடைத் தீவனமாகப் பயன்படும் பட்டாணி இனச் செடி வகை, பீன், பாதாம், அக்ரூட் பருப்புகள், மல்பெரி, திராட்சை, புகையிலை, உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள், வாதுமை மற்றும் மூலிகைகள் போன்றவை.
தலிபான்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல ஆண்டுகளில் இப்பகுதி குறிப்பாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. காபூல்-காந்தகார் வட்டச் சாலையில் அடிக்கடி ஏற்பட்ட தாக்குதல்களால் உதவி மற்றும் வளர்ச்சியை கடுமையாக பாதித்து உள்ளூர் மோதல்களை அதிகப்படுத்தியுள்ளது.[3]