சாக் டிக்சியர்

சாக் டிக்சியர்

சாக் டிக்சியர் (Jacques Tixier) [1] பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1925 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் தேதியன்று பிறந்தார். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியன்று இறந்தார். கத்தார், லெபனான் மற்றும் வட ஆப்பிரிக்காவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இவரது பணிக்காக குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் முதல் பிரெஞ்சு தொல்பொருள் பணியை வழிநடத்தினார். [2] இவரது குழு, மிசன் ஆர்க்கியோலாசிக் பிரான்சாய்சு கத்தார், இந்த ஆண்டு அல் கோர் தீவைக் கண்டுபிடித்தது. [3] இவர் சாக்ராவில் தொல்பொருள் தளத்தையும் கண்டுபிடித்தார். [4] டிக்சியர் 1980 ஆம் ஆண்டு குழுவின் கண்டுபிடிப்புகளின் இரண்டு தொகுதிகளில் ஒன்றை வெளியிட்டார். இரண்டாவது தொகுதி அவரது சக மேரி-லூயிசு இனிசானால் 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mort de l'archéologue Jacques Tixier". http://mobile.lemonde.fr/disparitions/article/2018/04/16/mort-de-l-archeologue-jacques-tixier_5286185_3382.html. 
  2. Mission archéologique française à Qatar. பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.
  3. "Prospections et fouilles au Qatar" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 December 2015.
  4. "The Discovery of Qatar's Past".
  5. Qatar Prehistory and Protohistory from the Most Ancient Times (Ca. 1,000,000 to End of B.C. Era).