சாக்சி ரங்காராவ் | |
---|---|
சிறீவெண்ணிலா படத்தில் சாக்சி ரங்காராவ் (1986) | |
பிறப்பு | இரங்கவச்சுலா இரங்க ராவ் 15 செப்டம்பர் 1942 கோந்திபாரு கிராமம், கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரிதானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 27 சூன் 2005 சென்னை, இந்தியா | (அகவை 62)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1967–1995 |
பிள்ளைகள் | சாக்சி சிவா |
சாக்சி ரங்க ராவ் (Sakshi Ranga Rao) (15 செப்டம்பர் 1942 - 27 சூன் 2005) மேடை நாடகங்களிலும், தென்னிந்தியத் திரைப்படங்களிலும் ஒரு குணசித்திர நடிகராக இருந்தார்.[1]
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்த குடிவாடா அருகே உள்ள கோந்திபாரு கிராமத்தைச் சேர்ந்த இரங்கவச்சுலா இரங்க ராவாக இலட்சுமி நாராயணன், இரங்கநாயக்கம்மாவுக்கு பிறந்தார்.[2] விசாகப்பட்டினத்தின் ஆந்திர பல்கலைக்கழகத்தில் தட்டச்சாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நாடகக் கலைகளில் ஆர்வம் காட்டிய இவர், மேடையில் சோகம் அல்லது பரிதாபத்தை ஏற்படுத்தும் பாத்திரத்தை ஏற்று நடித்தார். பாபு இயக்கிய 1967ஆம் ஆண்டில் வெளியான சாக்சி என்ற படத்துடன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ்.வி.ரங்க ராவிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதற்காக சாக்சி இரங்க ராவ் என்று அறியப்பட்டார்.[3] சுமார் நான்கு தசாப்தங்களாக சுமார் 450 படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலோர் நகைச்சுவை வேடங்களாகும்.
கே. விஸ்வநாத், பாபு, வம்சி ஆகியோர் இயக்கிய பெரும்பாலான தெலுங்குப் படங்களில் நடித்த பெருமை இவருக்கு இருந்தது. சிறிவெண்ணிலா, ஸ்வர்ண கமலம், ஏப்ரல் 1 விடுதலா, ஜோக்கர் ,ஸ்வர்காபிசேகம் போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். .
சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக 2005ஆம் ஆண்டில் தனது 63 வயதில் நீண்டகால நோய்க்குப் பிறகு சென்னையில் காலமானார். தொலைக்காட்சி நடிகர் சாக்சி சிவா இவரது இளைய மகனவார்.[4]