சாக்ஷி சிவானந்த் | |
---|---|
2006 ஆண்டு வெளியான தந்தகே தக்க மகா கன்னடப் படத்தில்சாக்ஷி சிவானந்த் | |
பிறப்பு | 15 ஏப்ரல் 1977 இந்திய ஒன்றியம், மகாராட்டிரம், மும்பை |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது வரை |
உறவினர்கள் | ஓஹானா சிவானந்த் (சகோதரி) |
சாக்ஷி சிவானந்த் (Sakshi Shivanand, பிறப்பு: ஏப்ரல் 15, 1977) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் , இந்தி படங்களில் நடித்துள்ளார்.[1] இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு அனுபவ் சின்ஹா இயக்கிய ஆப்கோ பெஹ்லே பீ கஹின் தேகா ஹை ஆகும். இதில் பிரியான்ஷு சாட்டர்ஜி, ஓம் பூரி, ஃபரிதா ஜலால் ஆகியோருடன் இணைந்து நடித்தார். பிரபல அசைவூட்ட தொலைக்காட்சித் தொடரான தி ஸ்டோரி ஆஃப் சிண்ட்ரெல்லாவில் சிண்ட்ரெல்லாவிற்கு இவர் பின்னணி குரல் கொடுத்தார். இது இந்தியாவில் ஜஸ்ட் கிட்ஸ்! சஹாரா டிவியில் ஒளிபரப்பானது.[2]
சிவானந்த் 1996 இல் பாலிவுட்டில் அறிமுகமானார். தனது ஆரம்ப கால தொழில் வாழ்க்கையின் போது, இவர் ஆதித்யா பஞ்சோலியுடன் இணைந்து ஜான்ஜீர் (1998) படத்தில் நடித்தார். பின்னர் இவர் டோலிவுட்டில் குறுகிய காலத்திற்குள் புகழ் பெற்றார்.[3] தெலுங்கு திரைப்படத் துறையில் பல பெரிய நாயகர்களுடன் இணைந்து நடித்தார். தெலுங்கில் அறிமுகமான இவர் மாஸ்டர் படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்தார். பின்னர் இவர் நாகார்ஜூனாவுடன் சீதாராமராஜு என்ற படத்தில் நடித்தார். மேலும் பாலகிருஷ்ணாவுடன் வம்சோத்தரகுடு படத்தில் நடித்தார். ராஜசேகருக்கு ஜோடியாக சிம்மராசியிலும், மகேஷ்பாபுக்கு ஜோடியாக யுவராஜுவிலும் நடித்தார். இவர் தெலுங்கு படமான ராஜஹம்ஷாவில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தார். யமஜாதகுடு மற்றும் கலெக்டர் காரு என்ற சமூக-கற்பனை படத்திலும் நடித்தார். 2000 ஆம் ஆண்டில், மகேஷ் பாபு மற்றும் சிம்ரன் பாகா ஆகியோருடன் யுவராஜு படத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு ஜே. டி. சக்ரவர்த்தி இயக்கிய ஹோமம் படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு இவர் ஆடினார்.
இவரது தங்கையான ஷில்பா ஆனந்த் ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார்.[4]
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழில் |
---|---|---|---|
1995 | ஜனம் குண்ட்லி | மது | இந்தி |
1995 | சஞ்சை | இந்தி | |
1996 | பாப்பா கெஹ்தே ஹை | இந்தி | |
1996 | இந்திர பிரஸ்தம் | சிறப்புத் தோற்றம் | மலையாளம் |
1996 | மஞ்சீரத்வானி | மலையாளம் | |
1997 | புதையல் | சொப்ணா | தமிழ் |
1997 | மாஸ்டர் | காஞ்சனா | தெலுங்கு |
1997 | மாப்பிள்ளை கவுண்டர் | பிரியா | தமிழ் |
1997 | கலெக்டர் காரு | தெலுங்கு | |
1998 | இராஜஹம்சா | தெலுங்கு | |
1998 | நிதி | தெலுங்கு | |
1998 | சன்சீர் | கவிதா | இந்தி |
1998 | சினேகிதலு | தெலுங்கு | |
1999 | இத்தரு மித்ரலு | அனிதா | தெலுங்கு |
1999 | சமுத்திரம் | இராஞ்சியலட்சுமி | தெலுங்கு |
1999 | சீதாராம ராஜு | தெலுங்கு | |
1999 | பெல்லிவரமண்டி | தெலுங்கு | |
1999 | யமஜாதகுடு | தெலுங்கு | |
2000 | வம்சடோரக்கடு | சுரேகா | தெலுங்கு |
2000 | குரோத் | சீமா | இந்தி |
2000 | யுவராஜு | ஸ்ரீவள்ளி | தெலுங்கு |
2000 | கலாட்டே அலியந்துரு | கன்னடம் | |
2000 | மா பிள்ளிக்கி ரண்டி | அஞ்சலி | தெலுங்கு |
2000 | பெல்லி சம்மந்தம் | தெலுங்கு | |
2001 | வாஞ்சிநாதன் | திவ்யா | தமிழ் |
2001 | சிம்மராசி | இராஜேஸ்வரி | தெலுங்கு |
2001 | வேதம் | சீதா | தமிழ் |
2002 | ஆப்கோ பெஹ்லே பீ கஹின் தேகா ஹை | பக்கி | இந்தி |
2002 | நானு நானே | ஆர்த்தி | கன்னடம் |
2002 | சைனிகா | கௌரி | கன்னடம் |
2002 | கோதண்டராமா | மீனாட்சி | கன்னடம் |
2002 | கல்நாயக்கன் கா கல்நாயக் | இந்தி | |
2003 | குஷி | சிறப்புத் தோற்றம் | இந்தி |
2004 | மானஸ்தன் | இராசாத்தி | தமிழ் |
2006 | தந்தேகே தக்க மகா | பாணு | கன்னடம் |
2007 | ஜஹான் ஜெயேகா ஹமென் பாயேகா | அஞ்சு கண்ணா | இந்தி |
2007 | சௌந்தர்யா | சௌந்தர்யா ரமேஷ் | கன்னடம் |
2008 | ஹோமம் | தெலுங்கு | |
2010 | ரங்கா தி தொங்கா | தெலுங்கு | |
2013 | ஆதிபகவன் | சிறப்புத் தோற்றம் | தமிழ் |
2014 | பரமசிவா | கன்னடம் | |
அறிவிக்கப்படும் | தில்லாகி ... யே தில்லாகி(Unreleased) | அறிவிக்கப்படும் | இந்தி |