சாட்சர் ஏரி (Satsar Lake) என்பது சம்மு காஷ்மீர் மாநிலத்தில் காந்தர்பல் மாவட்டத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 7 அல்பைன் ஏரிகளைக் கொண்ட ஒரு பெரிய ஏரி ஆகும். [1]
சாட்சர் ஏரியானது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அடுக்கு முறையிலான ஏரிகளின் இணைப்பானது ஆகும். இந்த ஏரிகளானது ஒரு குறுகிய அல்பைன் பள்ளத்தாக்கில் வடக்கிலிருந்து தெற்காக 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவிற்கும் அகலவாக்கில் 1 கிலோமீட்டர்(0.62 மைல்) தொலைவிற்கும் பரவியுள்ளது. இது துலைல் பள்ளத்தாக்கு மற்றும் சிந்து பள்ளத்தாக்கு ஆகியவற்றுக்கிடையேயான இயற்கை மலையிடைக் கனவாயாக இருக்கிறது.[2] கங்காபால் ஏரி மற்றும் நுண்ட்கோல் ஏரி ஆகியவை சாஜிபால் கனவாய்க்கு (4,041 மீட்டர் அல்லது 13,258 அடி) எதிர்புறமாக அமைந்துள்ளது. சாட்சர் ஏரிகனானவை கால்நடைகளின் மேய்ச்சல்காரர்களின் இருப்பிடமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முகாமிடும் இடமாகவும் அமைந்துள்ள பசும்பச்சைப் புல்வெளிகளால் சூழப்பட்டதாக இருக்கிறது. நாரங் மற்றும் நண்ட்கோல் ஆகியவை கோடைகாலத்தின் அருகாமையில் உள்ள வாழிடப் பகுதியாகவும் மலையேறுபவர்களின் முகாம் அமைக்கப்படும் அடிவாரமாகவும் இப்பகுதி விளங்குகிறது.[3][4]
சாட்சர் ஏரியானது முதன்மையாக பனி உருகுவதால் ஏற்பட்டது. கோடை மற்றும் இலையுதிர் காலத்தின் பிற்பகுதிகளில், இரண்டு அல்லது மூன்று ஏரிகள் வறண்டு விடுகிறது.