சாட்சாரி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() | |
அமைவிடம் | ஹபிகாஞ் , வங்காளதேசம் |
ஆள்கூறுகள் | 24°07′12″N 91°27′03″E / 24.12000°N 91.45083°E[1] |
பரப்பளவு | 243 ha (600 ஏக்கர்கள்) |
நிறுவப்பட்டது | 2005 |
சாட்சாரி தேசியப்பூங்கா (Satchari National Park) வங்காளதேசத்தில் ஹபிகாஞ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1974 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பின்னர் 243 ஹெக்டேர்கள் (600 ஏக்கர்கள்) நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. சாட்சாரி எனும் வங்காளச் சொல்லுக்கு ஏழு ஓடைகள் என்று பெயர். [2]இந்த வனப்பகுதியில் 7 ஓடைகள் செல்வதால் இந்தப்பெயர் சூட்டப்பட்டது. இந்தப்பூங்கா ரகுநந்தன் மலையில் அமைந்துள்ளது.[3] இது வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து 130 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கே உள்ள திப்ரா கிராமத்தில் 24 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கே 9 தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. அரசுடன் இணைந்து நிஷர்கா எனும் தன்னார்வ அமைப்பும் இந்தப்பூங்காவை பராமரிக்கின்றனர். இங்கே சுற்றுச் சூழல் சுற்றுலாவும் நடத்துகின்றர்.
{{cite web}}
: Cite has empty unknown parameter: |trans_title=
(help); Unknown parameter |separator=
ignored (|mode=
suggested) (help)