சாட்மாலா மலைத்தொடர் | |
---|---|
டோடாப்-ஒரு மலை உச்சி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,472 m (4,829 அடி) |
ஆள்கூறு | 20°23′25″N 73°54′31″E / 20.39028°N 73.90861°E |
புவியியல் | |
அமைவிடம் | சாட்டமாலா தொடர் |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாசிக் |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் |
நிலவியல் | |
மலையின் வகை | பசாற்றுக் கல் |
பாறை வகை | எரிமலைப்பாறை |
சாட்மாலா (Satmala), மகராட்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் வழியாகச் செல்லும் ஒரு மலைத் தொடராகும். சகாயத்திரி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இச்சிகரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும், முக்கிய இடங்களிலிருந்தும் பார்க்க முடியும். இச்சிகரங்களில் உயரமான சிகரமான தோதப்(1,451அடி), மகராட்டிரத்தின், கல்சுபாய் மற்றும் சால்கருக்கு அடுத்த மூன்றாவது உயரமான சிகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் 29வது உயரமான மலையாகும். இதன் கிழக்கு பகுதியில் சான்வாடு தொடர் அமைந்துள்ளது. சாட்மாலா என்ற பெயரில் தெலுங்கானாவிலும் ஒரு மலைத்தொடர் உள்ளது.[1]
படிமம் | பெயர் | ஏற்றம் (மீ) | மாவட்டம் | சிறப்பு |
---|---|---|---|---|
தோடாப் | 1472 | நாசிக் | 2nd highest peak in நாசிக்கில் இரண்டாவது உயரமான இடம். | |
சப்தசுருங்கி | 1,264 | நாசிக்| இந்து ஆன்மிக சுற்றுலாத் தலம் |