சாண்டுபி ஏரி, இந்திய மாநிலமான அசாமின் காமரூப் மாவட்டத்திலுள்ள ஏரியாகும். இது குவகாத்தியில் இருந்து 64 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரி காரோ மலைக்குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இந்த ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் சங்டூபி திருவிழாவின் போது இங்கு வரலாம். இந்த திருவிழா ஜனவரி முதல் வாரம் நடைபெறும். திருவிழாவில் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பாரம்பரிய உணவு வகைகளையும் உண்டு மகிழலாம்.[2]
குவகாத்தியில் இருந்து மிர்சா வரைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து இங்கு தனியார் வாகனங்களில் இயக்கப்படுகின்றன. இங்குள்ள அரசினர் விடுதியில் தங்கிக் கொள்ளலாம்.[3]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)