சாத் பெலோ

சாத் பெலோ தீவு கோயில்
சாத் பெலோ is located in Sindh
சாத் பெலோ
Sindh-இல் உள்ள இடம்
சாத் பெலோ is located in பாக்கித்தான்
சாத் பெலோ
சாத் பெலோ (பாக்கித்தான்)
அமைவிடம்
நாடு:பாக்கித்தான் பாக்கித்தான்
மாநிலம்:சிந்து மாகாணம்
மாவட்டம்:சுக்கூர்
அமைவு:சாத் பெலோ
ஆள்கூறுகள்:27°41′37.6″N 68°52′43.5″E / 27.693778°N 68.878750°E / 27.693778; 68.878750
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோவில்
இணையதளம்:http://www.pakistanhinducouncil.org/

சாத் பெலோ (Sadh Belo) அல்லது சாத் என்பது, பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலுள்ள, சுக்கூருக்கு அருகிலுள்ள சிந்து ஆற்றிலுள்ள ஒரு தீவு ஆகும். இது மிகவும் மதிக்கப்படும் இந்துக் கோயில்களுக்கு மிகவும் பிரபலமானது. இங்குள்ள கோயில்கள் வட இந்தியாவை மையமாகக் கொண்ட துறவற சாதுக்களின் மத பிரிவான உதாசி இயக்கத்துடன் தொடர்புடையவை. இந்த தீவு பாக்கித்தானின் மிகப்பெரிய இந்து கோவிலான தீரத் அஸ்தானுக்கு பிரபலமானது. இந்த வளாகத்தில் மேலும் எட்டு கோயில்கள், ஒரு நூலகம், உணவுக் கூடங்கள், ஒரு பெரிய தோட்டம், துறவிகளும் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடும் மக்கள் தங்க விரும்பும் அறைகளும், குடியிருப்புகளும் உள்ளன. [1]

சொற்பிறப்பியல்

[தொகு]
இந்த சன்னதியில் சிக்கலான பளிங்கு வேலைகள் உள்ளன.

இந்த தீவு ஒரு காலத்தில் காடுகள் நிறைந்த தீவாக இருந்தது. இது மேனக் பர்பத் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்துத் துறவியான பாபா பங்கந்தி மகாராஜ் என்பவர் இங்கு குடியேறினார். பின்னர் இந்த இடம் சாது பெலோ என்று அறியப்பட்டது. சாது பெலோ என்ற சொல்லுக்கு முனிவரின் காடுகள் என்று பொருள். [1][2] சில ஆதாரங்களின்படி, சாத் பாலாவுக்கு "சயீத்" என்ற அரபு தளபதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதகவும் தெரிகிறது. அவர் இத்தீவை ஆக்கிரமித்து தனது ஆட்சியை நிலைநிறுத்தினார். [3]

நிலவியல்

[தொகு]
சாத் பெலோ

சாத் பெலோ தீவு புக்கூர் தீவிலிருந்து கீழ்நோக்கி உள்ளது. மேலும் அதிலிருந்து ஒரு குறுகிய நீளமான நதியால் பிரிக்கப்படுகிறது. இது ரோஹ்ரி மற்றும் சுக்கூர் இடையே பாயும் சிந்து நதியில் அமைந்துள்ளது. [4] கோவில் வளாகம் இரண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தீவுகளில் பரவியுள்ளது. சாத் பெலோவில் சமையலறை, வராண்டா, பல கோயில்கள் ஆகியவையும், தீன் பேலாவில் சமாதிகள், ஒரு பூங்கா, துறவிகள் தங்குமிடம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. [5]

கேலரி

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Sadhu Bela: Pakistan's temple island you won't forget". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-14.
  2. "Sadhu Bela: Pakistan's temple island". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2019-07-14.
  3. Souvenir of Sukkur. பார்க்கப்பட்ட நாள் 2 March 2020.
  4. "Sadhu Bela the island of Sukkur". Daily Times. September 15, 2017.
  5. Jatt, Zahida Rehman (June 12, 2018). "Sadh Belo temple: an abode of Udasipanth in Sindh". dawn.com.