சாத்தோடி அருவி (Sathodi Falls) இந்தியாவில் உள்ள ஒரு அருவியாகும், இது கருநாடகம் மாநிலம் உத்தர கன்டா மாவட்டம் எல்லூபூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சுமார் 15 மீட்டர் (49.2 அடி) உயரம் கொண்டது. இந்த ஓடை கொடசல்லி அணையின் பின்புறத்தில் காளி ஆற்றின் கரையில் பாய்ந்து செல்கிறது .
இது எல்லூரிலிருந்து சுமார் 25 கி.மீ. துரத்தில் உள்ளது. நீர்வீழ்ச்சியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கும்பரல் வரை சாலை மிதமானதாக இருக்கும்; மீதமுள்ள 5 கிமீ அது சிறிய பரிதாபமான நிலையில் உள்ளது. சாலை பணி முன்னேற்றம் அடைந்து 2017 ஆம் ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[1]