சாந்தனு குப்தா, இந்திய எழுத்தாளும், அரசியல் விமர்சகரும் ஆவார்.[1][2] இவர் இராமாயணப் பள்ளியை நிறுவியுள்ளார். [3]சாந்தனு குப்தா பாரதிய ஜனதா கட்சி: கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தினம் அல்லாத நூல்களை எழுதியுள்ளார். [4]நடப்பு உத்தரப் பிரதேச முதலமைச்சரானயோகி ஆதித்தியநாத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த The Monk Who Became Chief Minister எனும் நூலை எழுதியுள்ளார்.[1][5]The Monk Who Transformed Uttar Pradesh எனும் நூலில் சாந்தனு குப்தா யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியை எழுதியுள்ளார்[6][7]2024 இந்தியப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிப்பவர்கள் குறித்தான அரசியல் நகைச்சுவை நூலை 101 Reasons Why I Will Vote for Modi .தலைப்பில் எழுதிய முதல் எழுத்தாளர் சாந்தனு குப்தா ஆவார்.[8][9]
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் 7 பிப்ரவரி 1979 அன்று பிறந்த சாந்தனு குப்தா, ரிசிகேசுவில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் ப்ந்த் நகரத்தில் உள்ள ஜி. பி. பந்த் வேளாண்மை மற்றும் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார்.
பிறகு ஜம்சேத்பூர் நகரத்தில் உள்ள சேவியர் மேலாண்மைப் பள்ளியில் (XLRI) மேலாண்மை படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று, இந்தியா மற்றும் அயல் நாடுகளில் ஆலோசகராக பணியாற்றினார்.[10][11]
இவர் முதன்முதலில் ஐதராபாத் நகரத்தில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றினார்[12] பன்னாட்டு மென்பொருள் பணியிலிருந்து விலகிய பின்னர், நந்தி அறக்கட்டளையை[13] நிறுவி சமூக சேவையாற்றி வருகிறார்.[14][15][16][17]நந்தி அறக்கட்டளை மூலம் சாந்தனு குப்தா ஆந்திரம், மகாராட்டிரம் மற்றும் புது தில்லி பகுதிகளில் கல்வித்துறையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்காக திட்டங்களை நிர்வகிக்க உதவுகிறார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியுதவியுடன் உத்தரப் பிரதேசத்தில் கலவி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய புந்தேல்கண்ட் பகுதியில் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு சேவை செய்து வருகிறார். [11][10][18]
சாந்தனு குப்தா அரசியல் மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார்.[19][20][21]
சாந்தனு குப்தா இராமாயணப் பள்ளியை நிறுவி[22], தற்காலம் வரை இருக்கும் வாழ்க்கைப் பாடங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை விவரிக்கிறது.[23]