சாந்தி கிருஷ்ணா | |
---|---|
பிறப்பு | மும்பை, இந்தியா |
சாந்தி கிருஷ்ணா, மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பரதநாட்டியக் கலைஞரும் ஆவார். 1980,1990களில் மலையாளத் திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
பிறப்பு | பங்கஜவல்லி ஜனவரி 02, 1963 மும்பை, இந்தியா |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகை, நாட்டியக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1981 - இன்று வரை |
இவர் நடித்த முதல் படம் 1976ல் வெளியான ஹோமகுண்டம். இருந்தபோதும், 1981ல் வெளியான நித்ர என்ற திரைப்படத்தில் நடித்தே பிரபலமானார்.
1964 ஜனவரி இரண்டாம் நாளில் மும்பை மாநகரில், பாலக்காட்டைப் பூர்விகமாகக் கொண்ட கிருஷ்ணன் ஐயர், சாரதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பள்ளிக்கல்வியையும் கல்லூரிப்படிப்பையும் மும்பையில் தொடர்ந்தார். ஸ்ரீநாத் என்ற மலையாள நாடக நடிகரை 1984ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்[1] முதல் திருமணத்திற்குப் பின்னர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். 1995ஆம் ஆண்டில் இவரை விவாகரத்து செய்தார். பின்னர், 1998ஆம் ஆண்டில், கொல்லத்தைச் சேர்ந்த சதாசிவன் பஜோர் என்ற தொழிலதிபரை மணந்துகொண்டார். இவர் கணவர் ராஜீவ் காந்தி குரூப் ஆப் இன்ஸ்டிடியூட்ஸ் என்ற குழுமத்தின் இயக்குநர் ஆவார்.[2] பின்னர், நயம் வியக்தமாக்குன்னு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிப்பைத் தொடர்ந்தார்.[3]. அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க், அல்பனி போன்ற இடங்களில் வசித்து வந்த இவர் தற்போது தன் கணவருடனும் இரு மக்களுடனும் பெங்களூரில் வசித்துவருகிறார். சுரேஸ் கிருஷ்ணா என்ற திரைப்பட இயக்குநர் இவரது சகோதரர் ஆவார்.
1981ஆம் ஆண்டில் பரதன் இயக்கிய நித்ர என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து புகழ்பெறத் தொடங்கினார். அதே ஆண்டில், தமிழில் பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.[4] பின்னர், ஈணம், விச, மங்களம் நேருன்னு, இது ஞங்ஙளுடெ கத, கிலுகிலுக்கம், சாகரம் சாந்தம், ஹிமவாஹினி, சில்லு, சவிதம், கவுரவர், நயம் வியக்தமாக்குன்னு, பின்காமி, விஷ்ணுலோகம் என்னும் நன்மகள், பக்ஷே ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.[5]
இவர் கேரள அரசின் திரைத்துறை விருதைப் பெற்றுள்ளார். கேரள அரசின் திரைத்துறை விருதை வழங்கும் நடுவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.[6]. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் விருதுகள் பெற்றுள்ளார்.
2017ஆம் ஆண்டில் ஞண்டுகளுடெ நாட்டில் ஒரு இடவேள என்ற திரைப்படத்தில் நடித்தார்.
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2018 | விஜய் சூப்பரும் பவுர்ணமி | விஜயின் தாய் | |
கிருஷ்ணம் | மீரா | ||
மழயது | அனாமிகா | ||
அரவிந்தன்றெ அதிதிகள் | கீதாலட்சுமி | சிறப்புத் தோற்றம் | |
குட்டநாடன் மர்ப்பாப்பா | மேரி | பின்னணிப் பாட்டும் பாடியுள்ளார் | |
2017 | ஞண்டுகளுடெ நாட்டில் ஓரிடவேள | ஷீலா சாக்கோ | |
2012 | கற்பூரதீபம் | ஷீலா | |
1998 | மஞ்சீரத்வாணி | சுபத்ரா | |
1997 | லாலி | கன்னடத் திரைப்படம் | |
கல்யாண உண்ணிகள் | ரசியா | ||
நேருக்கு நேர் | சாந்தி | தமிழ்த் திரைப்படம் | |
1996 | லாலனம் | சலீனா | |
ஏப்ரல் 19 | சீனத் | ||
1995 | தட்சசீலா | கங்கா | |
அவிட்டம் திருநாள் ஆரோக்கிய சீமான் | ஹேமலதா | ||
சுக்ருதம் | துர்கா | ||
1994 | சகோரம் | ஷர்தாமணி | |
இலையும் முள்ளும் | பார்வதி | ||
குடும்ப விசேஷம் | அஸ்வதி | ||
பக்ஷே | ராஜேஸ்வரி | ||
பின்காமி | விஜ மேனோனின் தாய் | ||
பரிணயம் | மாது | ||
வாரணமால்யம் | வசுந்தரா | ||
தாதா | தேவி | ||
1993 | ஆலவட்டம் | ஊர்மிளா | |
செங்கோல் | ஜோசின் மனைவி | ||
ஜானி | மார்கரெட் | ||
மாயமயூரம் | டாக்டர் விமலா | ||
கந்தர்வம் | லட்சுமி | ||
1992 | மகாநகரம் | கீதா | |
சபரிமலையில் தங்க சூர்யோதயம் | ராதிகா | ||
அபராதா | சவுமினி | ||
கவுரவர் | ரமணி | ||
பண்டு பண்டொரு ராஜகுமாரி | தேவயானி | ||
சவிதம் | சவுமினி | ||
1991 | நயம் வியக்தமாக்குன்னு | வல்சலா | |
விஷ்ணுலோகம் | சாவித்ரி | ||
அச்சன் பட்டாளம் | அஷோக்கின் தாய் | ||
என்னும் நன்மகள் | ராதா தேவி | ||
1986 | நிமிஷங்கள் | அனிதா | |
1984 | மங்களம் நேருன்னு | உஷா | |
அன்புள்ள மலரே | தமிழ்த் திரைப்படம் | ||
1983 | பிரேம் நசீரெ காண்மானில்ல | சாந்தி கிருஷ்ணா | |
மணியறை | சப்னா | ||
ஹிமவாஹினி | ஹேமா | ||
சாகரம் சாந்தம் | ஸ்ரீதேவி | ||
ஓமணத்திங்கள் | அஜிதா | ||
சுவப்னலோகம் | |||
விசா | நளினி | ||
1982 | சில்லு | ஆனி | |
சிம்லா ஸ்பெசல் | உமா | தமிழ்த் திரைப்படம் | |
மணல் கயிறு (திரைப்படம்) | உமா | ||
நம்பினால் நம்புங்கள் | |||
இடியும் மின்னலும் | - | ||
கிலுகிலுக்கம் | அஞ்சலி | ||
இது ஞங்ஙளுடெ கத | பிரபா | ||
கேள்காத்த சப்தம் | சுஷமா | ||
1981 | பன்னீர் புஷ்பங்கள் | தமிழ்த் திரைப்படம் | |
சின்னமுள் பெரியமுள் | ராதா | ||
சிவப்பு மல்லி | |||
நித்ர | அஸ்வதி | ||
தாராட்டு | மீரா | ||
1980 | ஷாலினி என்றெ கூட்டுகாரி |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)