சாந்தி சாகர ஏரி | |
---|---|
2010 இல் ஏரி | |
அமைவிடம் | சுலேகெரே, சென்னகிரி, கர்நாடகா, தென்னிந்தியா |
ஆள்கூறுகள் | 14°7′48″N 75°54′17″E / 14.13000°N 75.90472°E |
வகை | ஏரி |
முதன்மை வரத்து | ஹரித்ரா, கட்டுப்படுத்தப்பட்ட பத்ரா அணையின் வலது கரை கால்வாய் |
முதன்மை வெளியேற்றம் | சித்தா கால்வாய், பசவா கால்வாய் |
வடிநிலப் பரப்பு | 329.75 km2 (127.32 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 8.1 km (5.0 mi) |
அதிகபட்ச அகலம் | 4.6 km (2.9 mi) |
மேற்பரப்பளவு | 2,651 ha (27 km2) |
சராசரி ஆழம் | 10 அடி (3 m) |
அதிகபட்ச ஆழம் | 27 அடி (8 m) |
கரை நீளம்1 | 50 km (31 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 612 m (2,008 அடி) |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
சாந்தி சாகர ஏரி (Shanti Sagara) சுலேகெரே என்றும் அழைக்கப்படும் இது, இந்தியாவின் கருநாடக மாநிலத்திலுள்ள தாவண்கரே மாவட்டத்தில் சென்னகிரி எனும் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவிலேயே கட்டப்பட்ட இரண்டாவது பெரிய ஏரியாகும்.[1].
சாந்தி சாகர ஏரி, 1128 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மதகுகள் கொண்ட அணையினால் உருவாக்கப்பட்டது. இந்த ஏரி 800 ஆண்டைய வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரிய ஏரியைக் கட்டமைக்க மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. 6,550 ஏக்கர் (2,651 எக்டர்) பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி 30 கிமீ (19 மைல்) சுற்றளவு கொண்டது. இது 81,483 ஏக்கர் (32,975 எக்டர்) மொத்த வடிகால் படுகையைக் கொண்டுள்ளது. இது 4,700 ஏக்கர் (1,900 எக்டர்) நிலத்திற்கு நீர்ப்பாசனம் அளிக்கிறது. மேலும், 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதனால் பயனடைகின்றன.[2]
இதில் இருமதகுகள் உள்ளன. வடக்கில் "சித்தா மதகும்" தெற்கில் "பசவா மதகும்" உள்ளன. மதகுகள் சிதைந்திருந்தாலும் நீரின் பெருவிசையால் அவற்றூடாக நீர் செல்லும்போது, சுற்றியுள்ள கட்டகம் சிதையாமல் உள்ளமை கட்டமைப்பின் நிலைப்புதிறத்தை வெளிப்படுத்துகிறது. [3]
ஏரி வற்றும்போது தேவைப்பட்டால் பத்திரா அணையின் வலது கரையில் இருந்து நீரை நிரப்பிக் கொள்ளும் வகையில் வசதியுள்ளது.[4]