சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா | |
---|---|
இலங்கை, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 அக்டோபர் 1965 முள்ளியவளை, முல்லைத்தீவு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம் | துணுக்காய் |
முன்னாள் மாணவர் | மதுரை பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி |
பணி | நிருவாக சேவை அதிகாரி |
சமயம் | இந்து |
சாந்தி சிறீஸ்கந்தராசா (Shanthi Sriskantharajah, பிறப்பு: 28 அக்டோபர் 1965)[1] இலங்கைத் தமிழ் நிருவாக சேவை அதிகாரியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்தி சிறீஸ்கந்தராஜா முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் கல்வி கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பில் ஈடுபட்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இலங்கை நிருவாக சேவையில் இணைந்து துணுக்காய் பிரதேச சபையில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றினார். ஈழப்போரின் இறுதிக் காலத்தில் எறிகணை வீச்சினால் படுகாயமடைந்து தனது இடது காலை இழந்தவர்.[2]
சாந்தி சிறீஸ்கந்தராசா 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 18,080 வாக்குகள் பெற்றார். எனினும் அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4][5][6] பின்னர் இவர் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[7]
துணுக்காயில் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து ஒளிரும் வாழ்வு என்ற அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றார்.[2]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)