சாந்தி ரங்கநாதன்

சாந்தி ரங்கநாதன்
Shanthi Ranganathan
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பணிசமூகசெயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980 இல் இருந்து
அறியப்படுவதுகுடிபழக்கத்திலிருந்து மீட்கும் பணி
வாழ்க்கைத்
துணை
டி.டி. ரங்கநாதன்
விருதுகள்பத்மசிறீ
ஔவையார் விருது
ஐநா விருது

சாந்தி ரங்கநாதன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானோரை மீட்கும் மருத்துவமனையை 1980 இல் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னையில் தொடங்கியவர்.

கல்வி

[தொகு]

சமூக கல்வி மையத்தில் (School of Social work) முதுகலைப் பட்டம் பெற்றவர். குடிப்பழக்கச் சிகிச்சைத் திறன்குறித்து முனைவர் பட்ட ஆய்வு முடித்துள்ளார். இளம் வயதிலேயே கணவனை இழந்த இவர், கணவரை இழந்தவுடன் அமெரிக்கா சென்று குடிப்பழக்க மீட்பு சிகிச்சைகுறித்த பயிற்சி பெற்றுவந்தார்.

பணிகள்

[தொகு]

பயிற்சி முடித்து வந்தபின் சென்னை இந்திரா நகரில் டி. டி. ரங்கநாதன் போதை மீட்பு மருத்துவ சிகிச்சை மையத்தைத் தொடங்கினார். கிராமங்களில் பெரும்பாலானோர் குடிக்கு அடிமையாவதை உணர்ந்ததால், கிராமங்கள் தோறும் முகாம்களை டி. டி. ரங்கநாதன் சிகிச்சை அமைப்பு நடத்தியது. குடிக்கு அடிமையானவர்களை மீட்கும் முயற்சியில் 1980 முதல் ஈடுபட்டு வருகின்றது.

பெற்ற விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமணி தீபாவளி மலர்,1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்121
  2. "சாந்தி ரங்கநாதனுக்கு ஒளவையார் விருது: தமிழக அரசு அறிவிப்பு". தினமணி. 8 மார்ச் 2015. http://www.dinamani.com/tamilnadu/2015/03/08/சாந்தி-ரங்கநாதனுக்கு-ஒளவைய/article2703549.ece. பார்த்த நாள்: 8 மார்ச் 2015. 
  3. "Shanti Ranganathan gets Avvaiyar award". தி இந்து. 14 அக்டோபர் 2015. 

வெளி இணைப்புகள்

[தொகு]