சாந்துபோங் (P193) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Santubong (P193) Federal Constituency in Sarawak | |
சாந்துபோங் மக்களவைத் தொகுதி (P193 Santubong) | |
மாவட்டம் | இலுண்டு மாவட்டம் கூச்சிங் மாவட்டம் |
வட்டாரம் | கூச்சிங் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 79,540 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | சாந்துபோங் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கூச்சிங்; இலுண்டு |
பரப்பளவு | 1,581 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | நான்சி சுக்ரி (Nancy Shukri) |
மக்கள் தொகை | 117,751 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சாந்துபோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Santubong; ஆங்கிலம்: Santubong Federal Constituency; சீனம்: 山都望联邦选区) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு; இலுண்டு மாவட்டம்; கூச்சிங் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P193) ஆகும்.[5]
சாந்துபோங் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து சாந்துபோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கூச்சிங் மாவட்டம் என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச்சிங் மாநகரம் ஆகும்.
இந்த மாவட்டம் கூச்சிங் பெருநகரம் (Kuching Proper) என்றும்; படவான் (Padawan) என்றும் இரண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் நடந்த ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு சிறு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கூச்சிங் நகரம் படிப்படியாக வளர்ச்சி கண்டது.
அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுத்தார்.
சாந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சாந்துபோங் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9] | |||
3-ஆவது மக்களவை | P123 | 1971-1973 | அவாங் வால் அவாங் அபு (Awang Wal Awang Abu) |
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (BUMIPUTERA) |
1973-1974 | பாரிசான் நேசனல் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||
4-ஆவது மக்களவை | P133 | 1974-1978 | சுலைமான் தாவூத் (Sulaiman Daud) | |
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | |||
7-ஆவது மக்களவை | P156 | 1986-1990 | ||
8-ஆவது மக்களவை | P155 | 1990-1995 | ரொகானி அப்துல் கரீம் (Rohani Abdul Karim) | |
9-ஆவது மக்களவை | P167 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | 1999-2004 | |||
11-ஆவது மக்களவை | P193 | 2004-2008 | வான் சுனைடி துங்கு ஜாபார் (Wan Junaidi Tuanku Jaafar) | |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | நான்சி சுக்ரி (Nancy Shukri) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
நான்சி சுக்ரி (Nancy Shukri) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 43,739 | 84.42 | 84.42 | |
முகமது ஜென் பேலி (Mohamad Zen Peli) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 5,058 | 9.76 | 10.96 ▼ | |
அபெண்டி செமான் (Affendi Jeman) | சுயேச்சை (Independent) | 3,012 | 5.81 | 5.00 | |
மொத்தம் | 51,809 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 51,809 | 98.19 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 953 | 1.81 | |||
மொத்த வாக்குகள் | 52,762 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 79,540 | 66.33 | 7.90 ▼ | ||
Majority | 38,681 | 74.66 | 16.10 | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)