பேராசிரியர் சாபர் அகமத் நிசாமி | |
---|---|
பிறப்பு | 25 நவம்பர் 1939 பிரதாப்கர், இராசத்தான் |
இறப்பு | 23 ஏப்ரல் 2009 தில்லி | (அகவை 69)
தேசியம் | இந்தியா |
பணி | பேராசிரியர் |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | விக்ரம் பல்கலைக்கழகம், உஜ்ஜைன் |
கல்விப் பணி | |
Main interests | அரசறிவியல், வரலாறு |
சாபர் அகமத் நிசாமி (Zafar Ahmad Nizami, 25 நவம்பர் 1939 — 23 ஏப்ரல் 2009) ஓர் இந்திய எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியர் ஆவார். இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பேராசிரியராக 30 வருடங்கள் பணி செய்தார். மேலும் மெமாரன்-இ-ஜாமியா, இந்துஸ்தான் கே சந்த் சியாசி ரஹ்னுமா, மௌலானா ஆசாத் கி கஹானி மற்றும் தாரிக்-இ-ஹிந்த்: அஹ்-இ-ஜதீத் ஆகிய புத்தங்களை எழுதியுள்ளார்.[1]
நிசாமி 1933, நவம்பர் 25 அன்று இராஜஸ்தானின் பிரதாப்கர் என்ற இடத்தில் பிறந்தார். இவர் உஜ்ஜைனில் உள்ள விக்ரம் பல்கலைகழகத்தில் ஆங்கில மொழியில் முதுகலைப் பட்டமும் (1959), அரசறிவியலில் முதுகலைப் பட்டமும் (161) பெற்றுள்ளார்.[2] இவர் ஜோரா, ரத்லம், சேஹோர், தடியா கல்லூரிகளில் விரிவுரையாளராக பணி செய்தார். பிறகு ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகத்தில் அரசறிவியலில் துறையில் பேராசிரியராக பணி செய்தார். பின்பு அந்த துறையின் தலைவராக பொறுப்பேற்றார்.
மேலும் இவர் டெல்லியில் உள்ள குறிக்கோள் படிப்புக்கான ஆய்வு மையத்தின் இயக்குனராகவும் பணி செய்துள்ளார்.2001 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வுப் பெற்றார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று டெல்லியில் இறந்தார்.[1]
நிசாமியின் படைப்புகள் பின்வருமாறு: [3] [4]
பின்வரும் ஆராய்ச்சி ஆய்வுகள் நிசாமியால் வழிநடத்தப்படுகின்றன: