சாமுண்டேஸ்வரி கோயில் | |
---|---|
![]() சாமுண்டேஸ்வரி கோயில் கோபுரம் | |
கர்நாடகா மாநிலத்தில் சாமுண்டிக் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கர்நாடகா |
மாவட்டம்: | மைசூர் |
அமைவு: | சாமுண்டி மலை |
ஆள்கூறுகள்: | 12°16′21″N 76°40′14″E / 12.272474°N 76.670611°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சாமுண்டி |
சிறப்பு திருவிழாக்கள்: | நவராத்திரி |
சாமுண்டி கோயில் (Chamundeshwari Temple) (ಶ್ರೀ ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇವಸ್ಥಾನ) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.[1] சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும்.
சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சாமுண்டிக் கோயில், 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும்.
சாமுண்டிக் கோயில் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் பொ.ஊ. 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலையில் 3000 அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல, பொ.ஊ. 1659-இல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது.[2] சாமுண்டி மலையில் 800வது படிக்கட்டில் அமைந்துள்ள சிறு சிவன் கோயிலுக்கு எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட கருங்கல் நந்தி சிலை உள்ளது. இச்சிற்பம் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.