சாமுவேலின் கல்லறை | |
---|---|
![]() சிலுவைப் போர் வீரர் கால அரண் எச்சங்களின் மேல் கட்டபப்ட்ட பள்ளிவாசல். இதன் கீழே சாமுவேலின் கல்லறை அமைந்துள்ளது. | |
ஆயத்தொலைகள் | 31°49′59″N 35°10′54″E / 31.832978°N 35.181633°E |
சாமுவேலின் கல்லறை (Tomb of Samuel; எபிரேயம்: קבר שמואל הנביא, எழுத்துப்பெயர்ப்பு கெவெர் ஸ்முஎல் க நெவி;, அரபு மொழி: النبي صموئيل) என்பது விவிலிய எபிரேய இறைவாக்கினரான சாமுவேல் அடக்கம் செய்யப்பட்ட பாரம்பரிய பகுதியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 908 மீட்டர் உயரத்தில் செங்குத்தான குன்றின் மேல் அமைந்துள்ளது. இது மேற்குக் கரையின் பாலத்தீன கிராமமான நபி சம்வில் என்னும் இடத்தில், எருசலேமின் வடக்கே 1.3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]