தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சாமுவேல் பத்ரி | ||||||||||||||||||||||||||
பிறப்பு | 8 மார்ச்சு 1981 பராக்பூர், டிரினிடாட் மற்றும் டொபாகோ | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை நேர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | ||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| ||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 56) | 30 ஜூன் 2012 எ. New Zealand | ||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 5 ஆகஸ்ட் 2018 எ. வங்காளதேசம் | ||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 77 | ||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||
2002–2013 | திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||
2013 | குல்னா ராயல் பெங்கால்ஸ் | ||||||||||||||||||||||||||
2013 | ராஜஸ்தான் ராயல்ஸ் (இந்தியன் பிரீமியர் லீக்) | ||||||||||||||||||||||||||
2013–2015 | டி&டி ரெட் ஸ்டீல் | ||||||||||||||||||||||||||
2014 | சென்னை சூப்பர் கிங்ஸ் | ||||||||||||||||||||||||||
2015/16 | பிரிஸ்பேன் ஹீட் | ||||||||||||||||||||||||||
2016–தற்போதுவரை | Islamabad United | ||||||||||||||||||||||||||
2016–2017 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | ||||||||||||||||||||||||||
2017–தற்போதுவரை | ராங்பூர் ரைடர்ஸ் | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 5 August 2018 |
சாமுவேல் பத்ரி (Samuel Badree பிறப்பு 8 மார்ச் 1981) என்பவர் ஒரு முன்னாள் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ அணியின் பயிற்சியாளர் ஆவார். இவர்நேர்ச் சுழல் பந்து வீச்சாளராக இருந்தார்.
டிரினிடாட்டின் பெனால்ட்-டெபே பிராந்தியத்தில் உள்ள பாராக்பூரில் உள்ள ஓர் இந்திய-டிரினிடாடியன் குடும்பத்தில் பத்ரி பிறந்தார். இவர் சான் பெர்னாண்டோவின் நபரிமா கல்லூரியில் பயின்றார், சிறு வயதிலிருந்தே துடுப்பாட்டம் விளையாடினார்.[1] தொழில் முறையாக துடுப்பாட்டம் விளையாடுவதற்கு முன்பு, பத்ரி மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். [2]
பத்ரி டிரினிடாட் மற்றும் டொபாகோ தேசிய அணிக்காக ஜனவரி 2002 இல்,தனது 20ஆம் வயதில், லீவர்ட் தீவுகளுக்கு எதிராக 2001-02 புஸ்டா தொடரில் முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] இதே ஆண்டின் இறுதில் இவர் பட்டியல் அ போட்டிகளில் 2002-03 ரெட் ஸ்ட்ரைப் கிண்ண தொடரில் அறிமுகமானார்.
நவம்பர் 2011 இல் வங்காள அ அணிக்கு எதிராக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். முதல் போட்டியில் 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளையும் , இரண்டாவது போட்டியில் 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு இலக்குகளைக் கைப்பற்றினார்.[4]
டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.