சாம் நாரிமன் வரியாவா (Sam Nariman Variava, பிறப்பு நவம்பர் 8,1940) என்பவர் ஓர் இந்திய நீதிபதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.
வரியாவா 1964 சூன் 22 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பம்பாய் உயர்நீதிமன்றத்திலும், பம்பாய் நகர குடிமை நீதிமன்றத்திலும் பயிற்சி பெறத் தொடங்கினார். இதன் பின்னர் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள சிடென்காம் வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் பகுதிநேரச் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றினார். நவம்பர் 21,1986 அன்று இவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு 1987 சூன் 12 அன்று நிரந்தர நீதிபதியாக ஆனார். வரியாவா 1999 மே 25 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார்.[1][2] இவர் 15 மார்ச் 2000 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். இதன் பின்னர் 8 நவம்பர் 2005 அன்று பணி ஓய்வு பெற்றார்.[3][4]
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)