சாம் பிட்ரோடா

சாம் பிட்ரோடா
2009 இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பிட்ரோடா
பிறப்பு16 நவம்பர் 1942 (1942-11-16) (அகவை 81)[1]
தித்லாகர், ஒரிசா, பிரித்தானிய இந்தியா
(நவீன ஒடிசா, இந்தியா)
குடியுரிமைஇந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
படித்த கல்வி நிறுவனங்கள்மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்
இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம், சிக்காக்கொ
பணிதொலைத்தொடர்பு பொறியாளர், தொலைமுனைவர்
பணியகம்பொதுத் தகவல், உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளில் பிரதமரின் முன்னாள் ஆலோசகர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கைத்
துணை
அஞ்சனா (தி. 1966)
வலைத்தளம்
www.sampitroda.com

சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா (Satyanarayan Gangaram Pitroda) (பிறப்பு; நவம்பர் 16,1942) சாம் பிட்ரோடா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய தொலைத்தொடர்பு பொறியாளரும் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.[2] இவர் கிழக்கிந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள தித்லாகரில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார்.[3] அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆலோசகராகவும் இருந்தார்.[4] இந்தியாவின் பொதுத் தகவல் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்னும் துறையில் பிரதம மந்திரிக்கு ஆலோசகராக இருந்த சாம் பிட்ரோடா இந்தியாவின் தொலைத் தொடர்புப் புரட்சிக்குப் பொறுப்பானவராகவும் கருதப்படுகிறார்.[5]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

பிட்ரோடா இந்தியாவின் ஒடிசாவிலுள்ள தித்லாகரில் ஒரு குஜராத்தி பெற்றோருக்கு பிறந்தார்.

1966 ஆம் ஆண்டில் இவர் சிகாகோவிலுள்ள ஜி. டி. இ. தொலை தொடர்பு நிறுவனத்தில் சேர்ந்தார். [6]1975 ஆம் ஆண்டு மின்னணு நாட்குறிப்பேட்டை இவர் கண்டு பிடித்தார். இதன் காரணமாக, கையால் இயக்கப்படும் கணினிக் கணக்கிடல் தொழில் நுட்பத்தின் ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்..[7]

இந்தியாவுக்குத் திரும்புதல் மற்றும் பிற்கால தொழில் வாழ்க்கை

[தொகு]

1981 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு திரும்பி, இந்தியாவின் தொலைத்தொடர்பு முறையை நவீனமயமாக்க உதவ முடிவு செய்தார்.[8]1984 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில் இந்தியா திரும்பிய பிட்ராடோ, தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டிற்கான மையமான சி-டாட் என்ற மையத்தைத் தொடங்கினார். அமெரிக்க குடிமகனாக இருந்த இவர் இந்திய அரசாங்கத்தில் பணியாற்ற மீண்டும் இந்திய குடியுரிமையைப் பெற தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார்.[9]

1990களில் பிட்ரோடா தனது வணிக நலன்களை மீண்டும் தொடங்க சிகாகோ திரும்பினார். மே 1995 இல், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் வேர்ல்ட் டெல் முன்முயற்சியின் முதல் தலைவராக ஆனார்.[10]

1993 ஆம் ஆண்டில், பிட்ரோடா (தர்ஷன் சங்கருடன் இணைந்து ) உள்ளூர் சுகாதார பாரம்பரியத்தின் புத்துயிர் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் பெங்களூருக்கு அருகே உள்ள இடைநிலை சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றை நிறுவ உதவினார். இந்த அறக்கட்டளை இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவான ஆயுர்வேதத்தை ஊக்குவிக்கிறது.[11]

அக்டோபர் 2009 இல், பிட்ரோடா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொது தகவல் உள்கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பிட்ரோடா 2010 இல் தேசிய கண்டுபிடிப்பு மன்றத்தை நிறுவினார்.[12] ஆகஸ்ட் 2010 இல், அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.[13] 1992 ஆம் ஆண்டில், இவரது சுயசரிதை வெளியிடப்பட்டது.[14]

சர்ச்சைகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் போது,பரம்பரை வரி குறித்து பிட்ரோடா கருத்து தெரிவித்தார். அதில் அமெரிக்காவின் சொத்து செல்வ மறுவிநியோகக் கொள்கையைக் கூறி இந்தியாவிலும் அதைப் பின்பற்றவேன்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. .[15] [16][17]

2019 இந்தியப் பொதுத் தேர்தலின் போது 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் குறித்து பிட்ரோடா கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.[18] சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்ட உடனேயே, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் இந்திய வெளிநாட்டு காங்கிரசின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Timeline".
  2. "Playing it again: What Sam Pitroda said & status of inheritance tax in India, abroad". The Times of India. 2024-04-25. https://timesofindia.indiatimes.com/india/playing-it-again-what-sam-pitroda-said-status-of-inheritance-tax-in-india-abroad/articleshow/109573137.cms. 
  3. "Timeline". Sam Pitroda (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  4. "The Maharaja Sayajirao University of Baroda". msubaroda.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
  6. "Sam Pitroda: Lifetime Achievement Award 2002". http://dqindia.ciol.com/content/top_stories/102122703.asp. 
  7. "Electronic Diary patent - CHM Revolution". Computerhistory.org. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.
  8. Emily Stone (26 November 2007). "Chicago's 'Mr. India'". Crain's Chicago Business. http://www.chicagobusiness.com/article/20071124/ISSUE02/100028913/chicagos-mr-india. 
  9. Mike Hughlett (8 July 2007). "'Telecom czar' focuses on his next big thing". Chicago Tribune. https://www.chicagotribune.com/2007/07/08/telecom-czar-focuses-on-his-next-big-thing/. 
  10. "Interim Board of Directors Elects Mr. Sam Pitroda as Chairman". http://www.itu.int/newsarchive/press_releases/1995/ITU95-6.html. 
  11. "About". Web site. The Institute of Trans-Disciplinary Health Sciences and Technology. பார்க்கப்பட்ட நாள் 15 July 2013.
  12. "National Innovaiton Council". innovationcouncilarchive.nic.in. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.
  13. "Mr. Sam Pitroda, Chairman". Web site. National Innovation Council. Archived from the original on 20 October 2011. பார்க்கப்பட்ட நாள் 30 January 2012.
  14. Mayank Chhaya (June 1992). Sam Pitroda: A Biography. Konark Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122002757.
  15. "About". Web site. NDTV. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
  16. "People in East look like Chinese, in South look like Africans". Web site. ANI. பார்க்கப்பட்ட நாள் 8 May 2024.
  17. Prabhu, Sunil (2024-05-08). "Sam Pitroda Quits After Landing Congress In New Mess Over Racist Comments". Web site. NDTV. பார்க்கப்பட்ட நாள் 9 May 2024.
  18. "About". Web site. AajTak. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]