சாரதா முகர்ஜி (Sharda Mukherjee) (பிறப்பு: 1919 பிப்ரவரி 24 [1] ) இவர் ஓர் இந்திய சமூக மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் விஜயலட்சுமி பண்டிட்டின் மருமகளும், இந்தியாவின் முதல் விமானப் படைத் தளபதி சுப்ரத்தோ முகர்ஜியின் மனைவியும் ஆவார். சாரதா சமூகப் பணிகளில் தீவிரமாக இருந்தார். கணவர் இறந்த பிறகு, இவர் பொது விவகாரங்களில் தீவிரமாக இருந்தார்.
சாரதா, 1919 பிப்ரவயில் மும்பையில் சாரதா பண்டிட் என்ற மகாராஷ்டிரக் குடும்பத்தில் ராஜ்கோட்டில் பிறந்தார். 1978 முதல் 1983 வரை குசராத்தின் ஆளுநராக இருந்தார். 1977ஆம் ஆண்டில், இவர் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[2] குஜராத்தின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். அவர் இரு மாநிலங்களின் முதல் பெண் ஆளுநராக இருந்தார்.[3]
இவரது தந்தைவழி மாமா ரஞ்சித் எஸ் பண்டிட் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டித்]] என்பவரை மணந்தார். எனவே புகழ்பெற்ற எழுத்தாளர் நயன்தாரா செகல் இவரது உறவினராவார். இவரது தாய் சரசுவதிபாய் பண்டிட்டின் சகோதரி புகழ்பெற்ற நடிகை மற்றும் திரைப்பட ஆளுமை துர்கா கோட்டே என்பராவார்.
மகாராட்டிராவின் ரத்னகிரி (மக்களவைத் தொகுதி) பகுதியிலிருந்து 3ஆவது மற்றும் 4 வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)