சாரா ஆர்மர் | |
---|---|
வான்கூவைல் 2010இல் நடந்த சர்வதேச நாட்டுப்புற இசைத் திருவிழாவில் ஆர்மர் Festival | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | நவம்பர் 12, 1970 |
பிறப்பிடம் | பர்லிங்டன், ஒன்றாரியோ, கனடா |
இசை வடிவங்கள் | கிராமிய இசை, பாப், ராக் |
தொழில்(கள்) | பாடகர்-பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | குரலிசை, கித்தார், பாஸ், முரசு |
இசைத்துறையில் | 1987–தற்போது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | கோல்ட் சுனாப் |
இணைந்த செயற்பாடுகள் | தி சாடில்ட்ராம்ப்ஸ், வீப்பிங் டைல் |
இணையதளம் | sarahharmer |
சாரா ஆர்மர் (Sarah Harmer) (பிறப்பு நவம்பர் 12, 1970) கனடாவைச் சேர்ந்த ஓர் பாடகியும், பாடலாசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார்.[1]
ஒன்றாரியோவின் பர்லிங்டனில் பிறந்து வளர்ந்த ஆர்மர், தனது மூத்த சகோதரி தி டிராஜிகலி ஹிப் என்ற இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியபோது, இளம் வயதிலேயே இசைக்கலைஞராக தன்னை வெளிப்படுத்தினார்.[2][3]
17 வயதில், தி சாடில்ட்ராம்ப்ஸ் என்ற தொராண்டோ இசைக்குழுவில் சேர இவர் அழைக்கப்பட்டார். மூன்று வருடங்களுக்கு, ஒன்ராறியோவின் கிங்ஸ்டனில் உள்ள ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமான குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இவர் நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தார்.[4]
தி சாடில்ட்ராம்ப்சை விட்டு வெளியேறிய பிறகு, இவர் பல கிங்ஸ்டன், ஒன்ராறியோ இசைக்கலைஞர்களுடன் தனக்கென வீப்பிங் டைல் என்ற ஒரு இசைக்குழுவை உருவாக்கினார்.[2][5] இசைக்குழு தனது முதல் இசைத் தொகுப்பை 1994இல் வெளியிட்டது.[6] அதன்பிறகு, இவர்கள் ஒரு பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் இவர்களின் இசைத் தொகுப்பு 1995 இல் ஈபி என்ற பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டது. இசைக்குழு தொடர்ந்து பல வானொலி அலைவரிசைகளில் தங்கள் அடுத்தடுத்த இசை நிகழ்ச்சிகளை நடத்தியது.[4]
1998ஆம் ஆண்டில், ஆர்மர் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் பரிசாக பாப் தரங்களின் தொகுப்பைப் பதிவு செய்தார்.[2] அதைக் கேட்ட பிறகு, இவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் அதை ஒரு இசைத் தொகுப்பாக வெளியிடும்படி கேட்டுக்கொண்டனர். 1999இல் இவர் அதை சாங்ஸ் பார் கிளம் என்ற பெயரில் வெளியிட்டார்.[2] பின்னர், மற்றொரு இசைத் தொகுப்பில் பணி செய்யத் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில், இவர் யூ வேர் ஹியர் என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார்.[4] 2001ஆம் ஆண்டில் இவர் தனது இசைத் தொகுப்பை பிரபலபடுத்த கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.[7][8]
2005ஆம் ஆண்டில், இவர் PERL (Protecting Escarpment Rural Land) (கிராம நிலத்தைப் பாதுகாத்தல்) என்ற நிறுவனத்தை நிறுவினார். இது நயாகரா அருகேயுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக பிரச்சாரம் செய்தது.[9] இந்த அமைப்பை ஆதரிப்பதற்காக, இவரும் இவருடைய இசைக்குழுவும் சுற்றுப்பயணத்தில் இறங்கினர். புரூஸ் பாதையில் நடைபயணம் மேற்கொண்டனர். மேலும், வழியிலுள்ள நகரங்களில் உள்ள திரையரங்குகளிலும், சமூக அரங்குகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த சுற்றுப்பயணம் ஆவணப்படமாக எஸ்கார்ப்மென்ட் புளூஸ் என்ற பெயரில் 2006இல் வெளியிடப்பட்டது. மேலும், இந்த பிரச்சாரத்தைப் பற்றி தி லாஸ்ட் ஸ்டாண்ட்: ஏ ஜர்னி த்ரூ ஏஞ்சியன்ட் கிளிஃப் பேஸ் ஃபாரஸ்ட் ஆஃப் நயாகரா எஸ்கார்ப்மென்ட் என்ற ஒரு புத்தகத்தையும் இவர் எழுதினார். அக்டோபர் 2012இல், இவரது நிறுவனம் வளர்ச்சிக்கு எதிரான நிலங்கள் ஆக்கிரமிப்பின் வழக்கை வென்றது.
கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதியான மர்லின் சோர்லிக்கு ஆதரவாக நிகழ்ச்சிகளை வழங்கி அவருக்கு வாக்கு சேகரித்தார். ஒன்ராறியோ கிரீன் கட்சி தலைவரான எம்பிபி மைக் சிரைனருக்கு ஆதரவாகவும் இவர் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
மார்ச் 24, 2018 அன்று, திரான்ஸ் மலை வழியாக குழாய் விரிவாக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிண்டர் மோர்கனின் பர்னாபி முனையத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.[10] பிப்ரவரி 2019இல், ஒன்ராறியோ அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட சட்ட முன் வடிவு 66க்கு எதிராக கிங்ஸ்டன் நகர மன்ற கூட்டத்தில் பேசினார்.[11]