சாரா இலீ இலிப்பின்கோட் (Sarah Lee Lippincott) | |
---|---|
பிறப்பு | [1] பிலடெல்பியா, பென்சில்வேனியா | அக்டோபர் 26, 1920
இறப்பு | பெப்ரவரி 28, 2019 பென்சில்வேனியா | (அகவை 98)
வாழிடம் | கென்னட் சதுக்கம், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா |
துறை | வானியல் |
பணியிடங்கள் | சுவார்த்மோர் கல்லூரி, சுபிரவுல் வான்காணகம் |
அறியப்படுவது | லிரும விண்மீன்கள்]] |
தாக்கம் செலுத்தியோர் | பீட்டர் வான் தெ கேம்ப் |
சாரா இலீ இலிப்பின்கோட் (Sarah Lee Lippincott) (பிறப்பு: அக்டோபர் 26, 1920[2] – பெப்ரவரி 28, 2019)[3] அல்லது சாரா இலீ இலிப்பின்கோட் சிம்மர்மன் (Sarah Lee Lippincott Zimmerman) எனவும் அழைக்கப்படுபவர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சுவார்த்மோர் கல்லூரி தகைமைப் பேராசிரியரும் அக்கல்லூரி சார்ந்த சுபிரவுல் வான்காணகத்தின் தகைமை இயக்குநரும் ஆவார்.[4] இவர் இரும விண்மீன்களின் பான்மையைத் தீர்மானிக்கவும் புறவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்கவும் வானளவையியலைப் பயன்படுத்திய முன்னோடி ஆவார்.
இவர் 1941 இல் கலை இளவல் பட்டத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் 1942 இல் கலை முதுவர் பட்டத்தை சுவார்த்மோர் கல்லூரியிலும் பெற்றார்.
இவர் 1920 இல் பிறந்தார். இவர் 1940 களில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்லூரியில் படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போது இவர் பூப்பந்தாட்டக் குழுவில் இருந்துள்ளார்.[5]
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ரதும் இவர் சுவார்த்மோர் கல்லூரியில் பீட்டர் வான் தெ கேம்புடன் நெருக்கமாக பணிபுரிந்து 1945 முதல் கேம்ப் ஓய்வுபெற்ற 1972 ஆம் ஆண்டுவரை பல வானியல் திட்டங்களில் கலந்துகொன்டார். கேம்ப் 1995 இல் இறந்தபோது அவரது நினைவேந்தலை எழுதியுள்ளார்.[6] ஐவர் கேம்ப் 1972 இல் ஓய்வு பெற்றதும் வான்காணகத்தின் இயக்குநர் ஆனார்.
மற்றவரோடு இணைந்து இவர் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்:
Lippincott published over one hundred papers in her career. These are two typical examples: