சாரா ஜேடு மெக்லசன் (Sara Jade McGlashan பிறப்பு: மார்ச் 28, 1982) நியூசிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக 2 தேர்வுத் துடுப்பாட்டம், 134 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், 76 பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 2002 முதல் 2016 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். இவர் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட், ஆஸ்திரேலியன் கேபிட்டல் டெர்ரிடரி, சிட்னி சிக்சர்ஸ், சசெக்ஸ், மற்றும் சதர்ன் வைப்பர்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1][2]