சாரா'ஸ் | |
---|---|
இயக்கம் | ஜூட் அந்தானி ஜோசப் |
தயாரிப்பு |
|
கதை | அக்ஷய் ஹரீஷ் |
இசை | ஷான் ரஹ்மான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | நிமிஷ் ரவி |
படத்தொகுப்பு | ரியாஸ் கே. பத்தர் |
கலையகம் | ஆனந்தா விசன் |
விநியோகம் | அமேசான் பிரைம் வீடியோ[1] |
வெளியீடு | சூலை 5, 2021 |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
சாரா'ஸ் (Sara's) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அக்ஷய் ஹரீஷ் எழுத, ஜூட் அந்தானி ஜோசப் இயக்கியுள்ளார். இதில் சன்னி வெய்ன் மற்றும் அண்ணா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ரியாஸ் கே. பத்தர் படத்தொகுப்பை செய்துள்ளார். இப் படமானது 2021 சூலை 5 அன்று அமேசான் பிரைம் வீடியோ மூலம் நேரடியாக வெளியிடப்பட்டது [3][4]
20 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணான சாரா வின்சென்ட், கர்ப்பம் தரிப்பது, குழந்தைப்பேறு ஆகியவற்றை அடியோடு நிராகரிக்கும் ஒரு பெண். திரையுலகில் இணை இயக்குநராக பணிபுரியும் இவளது மிகப்பெரிய கனவு ஒரு சார்பிலா இயக்குநராக வேண்டும் என்பதுதான். இவள் தனது 30 களின் முற்பகுதியில் ஜீவன் பிலிப்பை என்ற தன்னை ஒத்த சிந்தனையுடைய ஒரு இளைஞனை மணக்கிறாள். அவனும் குழந்தைப் பேறு குறித்த இவளது பார்வைக்கு ஏற்றவனாக இருக்கிறான். இந்நிலையில் ஒரு விபத்துபோல திட்டமிடாதக் கருவுருவை சாரா எதிர்கொள்கிறாள். குழந்தைப் பேறில் ஆர்வமற்ற ஜீவன் தன் முடிவில் இருந்து மாறுகிறான். தன்கனவுகள் கலைந்துவிடக்கூடும் எனக் குழந்தைப்பேற்றைத் தவிர்ப்பதில் சாரா உறுதி காட்டுகிறாள். குழந்தையா லட்சியமா என்ற ஊசலாட்டத்தில் சாரா என்ன முடிவு எடுக்கிறாள் என்பதே கதையின் முடிவு.
சாரா'ஸ் அமேசான் பிரைம் வீடியோவில் 2021 சூலை 5 அன்று வெளியானது [5][6]
{{cite web}}
: |first3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)