சாரு நிவேதிதா | |
---|---|
பிறப்பு | கே.அறிவழகன் திசம்பர் 18, 1953 நாகூர், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
புனைபெயர் | சாரு நிவேதிதா |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஸீரோ டிகிரி, ராஸ லீலா, புதிய எக்ஸைல் |
துணைவர் | அவந்திகா |
இணையதளம் | |
www.charuonline.com (தமிழ் வலைத்தளம்), | charunivedita.com (ஆங்கில வலைத்தளம்) |
சாரு நிவேதிதா (Charu Nivedita, பிறப்பு: 18 டிசம்பர் 1953) தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து.
இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு [1] 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது[2]. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் [3][4] இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. தி இந்து தனது தீபாவளி மலரில், தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு.
புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகளுள் முக்கியமானவை.
இவரின் 'நான் தான் ஔரங்ஸேப்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல், 2024ம் ஆண்டிற்கான க்ராஸ் வோர்டு விருதினை வென்றது.
23. பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 3
நூல்கள் | ஆண்டு | விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் | அளித்தவர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
இந்த பத்தாண்டுகளில் சிறந்த பத்து இந்தியர்கள்(2001) | தி எகனாமிக் டைம்ஸ்
(The Economic Times) |
|||
2014 | மனதில் புதைந்த முகங்கள் 25 | தி ஹிந்து
(தீபாவளி சிறப்பு மலர்) |
தமிழகத்தின் தலைசிறந்த 25 ஆளுமைகள் | |
2019 | கண்ணதாசன் விருது | |||
2022 | விஷ்ணுபுரம் விருது[6] | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் | ||
ஜீரோ டிகிரி | 2013 | ஜான் மிக்கல்ஷ்கி விருது[7][8]
(Jan Michalski Prize) |
2013ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது | |
2013 | 50 எழுத்தாளர்கள், 50 புத்தகங்கள் -
சிறந்த இந்திய புதினங்கள் |
ஹாப்பர் காலின்ஸ் (HarperCollins) பதிப்பகம் வெளியீடு | சிறந்த 50 நூல்களில் ஸீரோ டிகிரியும் இடம்பெற்றுள்ளது. | |
2014 | முக்கியமான புதினம் | தி சண்டே கார்டியன்
(The Sunday Guardian) |
உருவகப்படுத்துதல் வகை நூல்களில் முக்கியமானதாக கருதப்பட்டது. | |
2017 | 15க்கும் குறைவான ஆகச்சிறந்த இந்திய புதினங்கள் | மென்எக்ஸ்பீ.காம்
(Mensxp.com) |
||
நான் தான் ஔரங்ஸேப் | 2021 | சிறந்த நாவல் | வாசகசாலை அமைப்பு | |
நான் தான் ஔரங்ஸேப்
(ஆங்கில மொழிபெயர்ப்பு) |
2024 | வாசகர்களின் நாயக எழுத்தாளர் | க்ராஸ்வோட்டு | (Conversations With Aurangzeb) |