சாருகேசி கருநாடக இசையின் 26ஆவது மேளகர்த்தா இராகம் . அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் தரங்கிணி .[ 1] [ 2]
சாருகேசி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பாண என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2 ), அந்தர காந்தாரம்(க3 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், சுத்த தைவதம்(த1 ), கைசிகி நிஷாதம்(நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சர்வஸ்வர கமக வரிக இராகம்.
பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றது.
கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
இதன் பூர்வாங்கம் சங்கராபரணத்தைப் போன்றும், உத்தராங்கம் தோடியைப் போன்றும் இருப்பது கவனிக்கத்தக்கது.
மூர்ச்சனாகாரக மேளம் . இதன் மத்திம, பஞ்சம, நிஷாத சுரங்கள் கிரக பேதத்தின் வழியக முறையே கௌரிமனோகரி (23), நாடகப்பிரியா (10), வாசஸ்பதி (64) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
இதன் எண்ணைத் திருப்பிப் போட்டால் (62), இதன் பிரதி மத்திம மேளமாகிய ரிஷப்பிரியா கிடைக்கும்.
சாருகேசியின் ஜன்ய இராகங்கள் இவை.
திரையிசைப் பாடல்கள்[ தொகு ]
சாருகேசி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய