சார்கண்ட் விகாசு மோர்சா (பிரஜாதந்திரிக்) | |
---|---|
தலைவர் | பாபுலால் மராண்டி |
தொடக்கம் | 24 செப்டம்பர் 2006 |
கலைப்பு | 17 பெப்ரவரி 2020 |
பிரிவு | பாரதிய ஜனதா கட்சி |
இணைந்தது | பாரதிய ஜனதா கட்சி |
தலைமையகம் | அசாரிபாக், ஜார்கண்ட் |
இ.தே.ஆ நிலை | மாநில அரசியல் கட்சி[1] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 545 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 8 / 81 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
www.jharkhandvikasmorcha.in | |
இந்தியா அரசியல் |
சார்க்கண்ட் விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) என்பது சார்க்கண்ட் மாநில அரசியல் கட்சியாகும். சார்க்கண்டின் முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டி என்பரால் தொடங்கப்பட்டது. இக்கட்சியின் பெயரை மொழிபெயர்த்தால் சார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி (சனநாயகம்) என்று வரும். இக்கட்சியின் தோற்றம் குறித்து 2006, செப்டம்பர் 6 அன்று மரான்டியால் கசாரிபாக் என்னும் இடத்தில் அறிவிக்கப்பட்டது[3]. மரான்டி பாசகவில் இருந்தவர். அக்கட்சியில் தான் ஓரங்கட்டப்படுவதாக நினைத்து அதிலிருந்து 2006இன் நடுவில் விலகினார்.[4] 2020 பிப்ரவரியில் இக்கட்சி கலைக்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது.[5]
சாம்செட்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மருத்துவர் அஜய் குமார் சார்க்கண்ட் விகாசு மோர்சா சார்பில் போட்டியிட்டு பெரும் வாக்கு வேறுபாட்டில் 2011 யூன் அன்று வென்றார்.[6] இத்தொகுதி முன்னர் பாசகவின் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. மருத்துவர் அஜய் குமார் இந்தியக் காவல் பணி அலுவலரும் மருத்துவரும் ஆவார். அவர் நிர்வாக வணிக மேலாண்மையிலில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது மேக்சு குழுமத்தின் மேக்சு நீமன் (Max Neeman) என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். 1990இல் சாம்செட்பூரின் காவல் துறை ஆணையராக இருந்த போது அந்நகரை குற்றவாளிகளின் பிடியில் இருந்து விடுவித்தார்.
2014ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எட்டு தொகுதிகளில் வென்றது.[7]