சாலிகா பானு பேகம் Saliha Banu Begum | |
---|---|
முகலாயப் பேரரசரின் மனைவி | |
பாட்சா பேகம் | |
Tenure | சுமார் கி.பி. 1608 – 10 ஜூன் 1620 |
முன்னையவர் | அமீதா பானு பேகம் |
பின்னையவர் | நூர் சகான் |
இறப்பு | 10 ஜூன் 1620 ஆக்ரா, முகலாயப் பேரரசு |
துணைவர் | ஜஹாங்கீர் (தி. 1608) |
மரபு | தைமூர் (திருமணம் மூலம்) |
தந்தை | காசிம் கான் |
மதம் | இசுலாம் |
சாலிகா பானு பேகம் (Saliha Banu Begum) (இறப்பு 10 ஜூன் 1620) முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின்ர் தலைமை மனைவியாக இருந்தார்.[1] 1620 ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை தனது கணவரின் ஆட்சிக் காலத்தில் இவர் பாட்சா பேகமாக இருந்தார்.[2]
சாலிகா பானு பேகம் ஜஹாங்கீரால் ஆதரிக்கப்பட்ட அஸிம் என்பவரின் மகளாவார்.ref>Lal, K.S. (1988). The Mughal harem. New Delhi: Aditya Prakashan. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185179032.</ref> இவருக்கு அப்துர் ரகீம் என்ற ஒரு சகோதரன் இருந்தார்.
ஜஹாங்கீர் தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் 1608 இல் இவரை மணந்தார். இதன் விளைவாக, அவரது சகோதரர் அப்துர் ரகீமின் நிலை பெரிதும் முன்னேறியது. ரகீமுக்கு ‘தர்பியாத் கான்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் இவர் இறையாண்மை கொண்ட பெண்மணியாக முகலாயப் பேரரசின் மனைவியாகவே இருந்துள்ளார்.[3][4] இவர் 1620 இல் இறந்தபோது, இந்த பட்டம் ஜஹாங்கிரின் இருபதாவது (கடைசி) மனைவியுமான நூர் சகானுக்கு வழங்கப்பட்டது. நூர் சகானுக்கு ஒரே சக்திவாய்ந்த போட்டியாளராக இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், நூர் சகான் ஒரு வலிமையான போட்டியாளராக இருந்தார். மேலும், அரசாங்க விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார்.[5] பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியான வில்லியம்ஸ் ஹாக்கின்ஸ், ஜஹாங்கிரின் தலைமை மனைவிகளில் ஒருவராக இவரைக் குறிப்பிட்டுள்ளார்.
சாலிகா பானு பேகம் இந்தி மொழி கவிதைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்று கூறப்படுகிறது.[6]
சாலிகா பானு பேகம் 1620 ஜூன் 10 புதன்கிழமை இறந்தார்.[7] இவரது இழப்பால் ஜஹாங்கீர் மிகவும் துயரமடைந்தார். இவரது மரணம் குறித்து ஜோதிடர் ராய் என்பவர் முன்னரே தன்னிடம் அறிவித்ததாக ஜஹாங்கீர் குறிப்பிட்டார். மேலும், அவரது தீர்க்கதரிசனத்தின் துல்லியத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.[8]