சாலு நிகம் (Shalu Nigam) ஓர் இந்திய வழக்கறிஞர், பெண்ணிய சட்ட அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் முக்கிய வழக்கான சாலு நிகம் எதிர் கடவுச் சீட்டு அலுவலர் வழக்கில் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவு மே 17, 2016 அன்று பிறப்பிக்கப்பட்டது, இது தந்தையின் பெயர் இல்லாமல் கூட கடவுச் சீட்டு வழங்கப்படலாம் என்று கூறியது.[1]
சாலு நிகம் ஒரு வழக்கறிஞர்,[2] பெண்ணிய சட்ட அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். மகளிர் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையத்தில் இவரது முனைவர் பட்டம் ஆய்வுதவித் தொகையினப் பெற்றார், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக ஆதரவுடன் இந்த ஆய்வுதவித் தொகையினைப் பெற்றார்.[3] இவரது படைப்புகளில் டொமஸ்டிக் வயலன்சு இன் இந்தியா:வாட் ஒன் சுட் நோ?, விமன் அண்ட் டொமஸ்டிக் வயலன்சு லா இன் இந்தியா:எ குவெஸ்ட் ஃபார் இன்ஜஸ்டிசு மற்றும் டொமஸ்டிக் வயலன்சு லா இன் இந்தியா:மித் அண்ட் மிச்கானி ஆகிய குறிப்பிடத்தகுந்தன ஆகும். இவர் தெ ஃபவுண்டிங் மதர்ஸ்:15 விமன் ஆர்கிடெட் ஆஃப் தெ இந்தியன் கான்சிடியூசன் எனும் நூலினை இணைந்து எழுதினார். இவர் கவுண்டர்கரண்ட்சு.ஆர்க் மற்றும் சவுத் ஏசியா ஜர்னல் ஆகியவற்றிலும் பங்களித்து வருகிறார்.[4]இவர் தில்லி சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் (PUCL) செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[5][6]
குடும்ப வன்முறையில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு சட்ட மற்றும் பிற பாதுகாப்புகள் உட்பட பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் நிபுணத்துவம் பெற்றதற்காக நிகம் பரவலாக அறியப்படுகிறார்,[7], சுய பாதுகாப்பு உரிமை, திருமண வன்கலவி சட்டம் [8][9] சொத்துரிமை, சாதி மற்றும் பெண்களின் நிலை,[10] கோவிட் -19 சகாப்தத்தில் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான பின்னடைவு,[11] மற்றும் கோவிட் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு 19 தொற்றுநோய் ஆகியவற்றிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.[12] இந்தியாவில் கல்வி தொடர்பான வழக்காடலுக்காகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். இவர் வழக்கறிஞர்களின் ஆடை [13][14] தடுப்பூசியில் சமபங்கு [15][16] மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருதல் [17] போன்றவை தொடர்பான நிகழ்வுகளிலும் குறிப்பிடத்தக்க பங்கினை வழங்க்கியுள்ளார். 2020 இல் சுதா பரத்வாஜ் மற்றும் ஷோமா சென் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று போராடிய 600 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களில் ஒருவராக இருந்தார்.[18] மற்றும் ஜூலை 2021 இல், 900 தனிநபர்கள் மற்றும் குழுக்களுடன் சேர்ந்து, ஆன்லைனில் முஸ்லீம் பெண்களை வெறுக்கும் பேச்சு மற்றும் தவறான மனப்பான்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தனர். மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் உடனடி முத்தலாக் குற்ற திருத்தச் சட்டத்தினை கண்டிக்கும் வகையில் 'முஸ்லிம் பெண்கள் உரிமை தினத்தன்று ஆகஸ்ட் 2021 இல் இவர் 650 க்கும் மேற்பட்ட பெண்கள் உரிமை ஆர்வலர்களோடு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார் .[19]
இவரது மகள் ஆகஸ்ட் 24, 1997 இல் பிறந்தார், மேலும் தனது உயிரியல் தந்தையை விவாகரத்து செய்த பின்னர் நிகாமால் வளர்க்கப்பட்டார்.[20] நிகாமின் கூற்றுப்படி, இவள் பெண் என்பதால் இவர் தனது தந்தையால் நிராகரிக்கப்பட்டார்.[21] 2005 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், நிகம் தனது மகளின் தந்தையின் பெயரை வழங்காமல் கடவுச்சீட்டு பெற முடிந்தது, ஆனால் அடுத்த புதுப்பித்தலில் கணினி பயன்பாட்டிற்கு அது தேவைப்பட்டது.[21] நிகம் தனது மகளின் பெயரையும் அடையாளத்தையும் நிர்ணயிக்கும் உரிமையை மீறியதன் அடிப்படையில் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தர்.[21][21]
↑Patel, Krina (2019). "The Gap in Marital Rape Law in India: Advocating for Criminalization and Social Change". Fordham International Law Journal42 (5): 1019-1046.
↑Sutradhar, Ruman (May 2015). "What Caused Marginalization: A Study of the Tea Plantation Women of Cachar". International Journal of Science and Research4 (5): 2773. பன்னாட்டுத் தர தொடர் எண்:2319-7064.
↑Ganesh S., Selva; Chandran, RK; Lambodaran, G; Manodh, Pedamally (December 2020). "COVID-19: Current Status and Future Strategies to Control the Spread in the State of Tamil Nadu, India". Medico-legal Update20 (4): 2201.